அக்னிசிறகுகள் படத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மீரா மிதுன்.. செம கோபம்.. தமிழ்நாட்டுக்கே டாடா பைபை!

Recommended Video

Meera Mithun Glamour video:உள்ளாடை அணியாமல் படுமோசமான டிரெஸ்

சென்னை: சர்ச்சை நாயகியான மீரா மிதுன் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் செம கோபத்தில் உள்ளார் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய மோசமான நடவடிக்கையால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகும் இவரது ஆடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருப்பதாக கூறினார் மீரா மிதுன். ஆனால் படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான மீரா மிதுன் சன் பிக்ஸர்ஸ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரையும் விளாசினார்.

நீக்கப்பட்ட மீரா மிதுன்

இந்நிலையில் அவர் நடிப்பதாக இருந்த அக்னி சிறகுகள் படத்தில் இருந்தும் மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நடிகை அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார் என தெரிகிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் மீரா மிதுன்.

இன்டர்நேஷனல் லெவல்

ஏற்கனவே நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த மீரா மிதுன் தற்போது அக்னி சிறகுகள் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் செம கடுப்பில் உள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எனக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வேலைகளும் வாய்ப்புகளும் உள்ளன. நான் அதனை அமைதியாக செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டுல வழியில்ல

ஆனா ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டுல வாழ வழி இல்லாம பண்றது இங்கதான் நடக்கும். அதுதான் எனக்கு ரொம்ப பரிதாபமா இருக்கு. நல்லது.. தொழிலை தாண்டியும் நான் ஏன் எல்லா இடங்களிலும் நான் ஏன் தனிப்பட்ட முறையில் தொல்லை செய்யப்படுகிறேன் என்று கேட்டுள்ளார் மீரா மிதுன்.

தொடர்ந்து செய்யுங்கள்

சமூக வலைதளங்களில் எதையும் போஸ்ட் செய்ய அவர்கள் என்னை அனுமதிப்பதில்லை, இரண்டு நாட்களாகதான் நான் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருந்தேன், இப்போது ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் எனக்கு மனரீதியாக துன்புறுத்தல்கள் வருகிறது! நல்லது.. தொடர்ந்து செய்யுங்கள்.. என பதிவிட்டிருக்கிறார் மீரா.

தூய்மையான இமேஜ்

ஆறு வருடங்கள் பேஷன் துறையில் வலுவாகவும், இரண்டு வருடங்கள் கோலிவுட்டில் மிகவும் தூய்மையான இமேஜூம் இருந்தன, கடந்த 8 ஆண்டுகளாக என்னை யார் தடுக்க முயன்றார்களோ முடியவில்லை. இந்த ஆண்டு அவர்கள் எனது இமேஜை கெடுப்பதற்கும் என் புகழை முற்றிலுமாகத் தகர்ப்பதற்கும் ஒரு கருவியை எடுத்துவிட்டார்கள்!
பப்பை.. தமிழ்நாடு.. என பதிவிட்டிருக்கிறார் மீரா மிதுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X