சீயான் வீட்டிலிருந்து கிளம்பி வரும் இன்னொரு வாரிசு!

சென்னை: சீயானின் வீட்டிலிருந்து மற்றுமொரு கலை வாரிசு வந்துள்ளது.

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் மருமகன் அல்லு அர்ஜுன் போன்று நம்ம சீயானும் மகன் மற்றும் மருமகனை கலைத் துறையில் கால் பதிக்க வைக்கிறார்.

another star from vikrams house

நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜுமான், பிக் பாஸ் தமிழ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் நகைச்சுவை த்ரில்லர் பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கூறுகையில், அர்ஜுமனை ஒரு விளம்பரதாரர் மூலம் சந்தித்தேன், அவர் ஒரு பொருத்தமான நடிகர் என்பதை அறிந்தேன். அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன், இந்த படத்திற்காக நான் எழுதிய ஒரு கதா பாத்திரத்திற்கு பொருந்தியதால், அவரிடம் நடிக்க முடியுமா என கேட்டேன், "என்கிறார்

கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த நேரத்தில் நடிகர் விக்ரமிற்கு உறவுக்காரர் என்பது தனக்குத் தெரியாது என்று இயக்குனர் கூறுகிறார். "விக்ரமை போன்று இருப்பதாக நான் குறிப்பிட்டபோதுதான், அவர் விக்ரமின் சகோதரியின் மகன் என்று அர்ஜுமான் என்னிடம் கூறினார்" என்று திரைப்படத் தயாரிப்பாளர் கூறுகிறார்.

அர்ஜுமன் கதாபாத்திரமானது , இது ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்திற்கு எதிராக போராடுகிற கேரக்டர் என்று விஜய் வெளிப்படுத்துகிறார். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் மற்றும் பிக் பாஸ் ஜூலி ஆகியோர் காமிக் க்ரைம் கிளை அதிகாரிகளாக நடிக்கின்றனர், படத்தின் கதை ஒரு ஆபத்தான விளையாட்டைச் சுற்றி வருகிறது.

another star from vikrams house

ஏற்கனவே நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வந்து ஹிட்டாகி நல்ல வரவேற்பை பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் இதுவே. இப்படத்தில் இருந்து எதற்கடி வலி தந்தாய் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தற்போது வரை 3.5 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் விக்ரமிற்கு போட்டியாக மகனுடன் மருமகனும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். பல சிறப்பான சம்பவங்களை எதிர் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X