twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீன செயலிகள் தடை எதிரொலி.. மற்றுமொரு பெண் டிக்டாக் பிரபலம் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி

    |

    பஞ்சாப்: டிக்டாக் செயலி தடை காரணமாக மற்றுமொரு பெண் டிக்டாக் பிரபலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தியா - சீனா இடையே மோதல் வலுப்பெற்று வரும் நிலையில், சீன அரசுக்கு பொருளாதார ரீதியாகவும், இந்தியாவின் பாதுகாப்பு கருதியும் 59 சீன செயலிகளை அதிரடியாக இந்திய அரசு தடை செய்தது.

    டிக்டாக்கில் பிரபலமடைந்து அதன் மூலம் சம்பாதித்து வந்த பல பிரபலங்களுக்கு தற்போது, இந்த அதிரடியான நடவடிக்கை இடியாக விழுந்து இருக்கிறது.

    மயக்க மருந்து கொடுத்து பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய அதிகாரி மீது புகார்!மயக்க மருந்து கொடுத்து பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய அதிகாரி மீது புகார்!

    வீர மரணம்

    வீர மரணம்

    லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், அத்துமீறி, சீன வீரர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில், 20 இந்திய வீர்ர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதனை தொடர்ந்து, சீன வீரர்களை இந்திய வீரர்களும் பழிக்கு பழி தீர்த்தாக செய்திகள் வெளியாகின. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நடக்கும் சூழல் நிலவி வருகிறது.

    சீன செயலிகளுக்கு தடை

    சீன செயலிகளுக்கு தடை

    பொருளாதார ரீதியாக சீனாவை ஆட்டம் காண வைக்க வேண்டும் என பல நிபுணர்கள், நாடு முழுவதும் கொடுத்த யோசனை, அலசி அராய்ந்த மத்திய அரசு, அதிரடியாக 59 சீன செயலிகளை தடை செய்தது. அதில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் டிக்டாக், ஷேர் சாட், வி சாட், யுசி பிரவுசர் உள்ளிட்ட ஆப்களும் முடக்கப்பட்டன.

    இங்கேயும் பாதிப்பு

    இங்கேயும் பாதிப்பு

    டிக்டாக்கை தடை செய்தால், சீனாவில் தான் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்த அரசாங்கத்திற்கு, அதற்கு மாறாக, இந்தியாவிலேயே பல பாதிப்புகள் உருவாகின. டிக்டாக் மூலம் பிரபலமாகிய பல சாமானியர்களும், தங்களின் பொருளாதாரம் முற்றிலும் இதனால், தடைப்பட்டு போய்விட்டது என்றும், டிக்டாக் இல்லாமல் தங்களால் வாழ முடியாது என்றும் தெரிவித்து புலம்பி வருகின்றனர்.

    தற்கொலை

    தற்கொலை

    அனைத்திற்கும் மேலாக, சியா கக்கர் எனும் பெண் டிக்டாக் பிரபலம் சமீபத்தில், தற்கொலை செய்து கொண்டே உயிரிழந்தார். டிக்டாக் தடை காரணமாக அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், தற்போது மற்றொரு பெண் டிக்டாக் பிரபலம் சந்தியா செளஹனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    Recommended Video

    நாடு தான் முக்கியம்... TikTok-ல் இருந்து வெளியேறிய பிக்பாஸ் நடிகை
    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து வந்த சந்தியா செளஹன், டிக்டாக் தடை காரணமாக, கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டது டிக்டாக் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிக்டாக் தடை தான் காரணமா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    As per media reports in Punjab Kesari, another TikToker Sandhya Chauhan has ended her life. Sandhya, who lives in Delhi’s Green Park, committed suicide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X