என் முன்பு ஆடையை அவிழ்த்து அட்டகாசம் செய்தார்: பிரபல நடிகர் மீது பெண் புகார்
மும்பை: பிரபல நடிகர் ஆலோக் நாத் மீது மேலும் ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், தயாரிப்பாளருமான வின்டா நந்தா தெரிவித்தார்.
அந்த புகாரை ஆலோக் நாத் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் மேலும் ஒரு பெண் ஆலோக் நாத் மீது புகார் கூறியுள்ளார்.

பாலியல் புகார்
1999ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ஹம் சாத் சாத் ஹை படத்தில் வேலை பார்த்த பெண் ஒருவர் ஆலோக் நாத் மீது புகார் தெரிவித்துள்ளார். பெயரை தெரிவிக்க விரும்பாத அந்த பெண் கூறியதாவது, இரவுக் காட்சியை படமாக்கியபோது அவருக்கான உடைகளை கொடுக்க சென்றேன். ஆலோக் நாத்தோ என் கண் முன்பு உடைகளை அவிழ்த்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

ஓட்டம்
ஆலோக் நாத் ஆடையை அவிழ்த்ததை பார்த்து பயந்து நான் அந்த அறையில் இருந்து ஓடினேன். உடனே அவர் என் கையைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்யப் பார்த்தார். நான் அவர் பிடியில் இருந்து நழுவி ஓடிவிட்டேன். இயக்குனருக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் என்பதால் இதை அவரிடம் தெரிவிக்க எனக்கு தைரியம் இல்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

மாற்றம்
அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. சினிமா உலகை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்தேன். அதன் பிறகு நான் படங்களில் பணியாற்றவில்லை. வின்டாவின் தைரியத்தை பார்த்து வியக்கிறேன். எனக்கும் அது போன்ற தைரியம் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நான் ரொம்ப தூரம் வந்துவிட்டேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஆலோக் நாத்
பலாத்காரம் நடந்திருக்கலாம். அதை வேறு யாராவது செய்திருக்கலாம். அது குறித்து நான் பேச விரும்பவில்லை. இமேஜை கெடுக்க மக்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். என் இமேஜை விடுங்க அவர் சொன்னது எல்லாம் அபத்தமானது. வின்டா இன்று இவ்வளவு பெரிய நிலையில் இருப்பதற்கு நான் தான் காரணம் என்கிறார் ஆலோக் நாத்.


Click it and Unblock the Notifications











