நான் மைனராக இருந்தபோது.. அந்த நடிகர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தான் மைனராக இருந்தபோது, அந்த நடிகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல ஹாலிவுட் நடிகர் அன்சல் எல்கோர்ட். இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான கேரி என்ற ஹாலிவுட் ஹாரார் படம் மூலம் நடிகரானார்.
தொடர்ந்து டைவர்ஜன்ட், நவம்பர் கிரிமினல்ஸ், பேபி டிரைவர், ஜோனாதன், பில்லியனர் பாய்ஸ் கிளம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

வெஸ்ட்சைட் ஸ்டோரி
பேபி டிரைவர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது பெற்றவர். இப்போது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இவர் மீது கப்பி (Gabby) என்ற பெண் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமைநீண்ட அறிக்கை
'ஆன்சல் எல்கோர்ட்டுடன் எனது கதை' என்று தலைப்பில் அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பரபரப்பு பாலியல் புகாரை விளக்கமாகத் தெரிவித்துள்ளார். 'நான் 17 வயதை அடைந்த இரண்டு நாட்களிலேயே அன்சல் எல்கோர்ட்டால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். அவருக்கு அப்போது வயது 20.

ஸ்கிரீன்ஷாட்
அது எனக்கு முதன்முறை. நான் வேதனையில் இருந்தேன் என்று ஆரம்பித்து விரிவாக எழுதியுள்ளார். அன்சலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்த உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் அன்சலுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டன. அதில் அவருக்கு எதிரான கருத்துக்களை பலர் தெரிவித்தனர்.

விருப்பத்தின் பேரில்
இந்நிலையில் அந்தப் புகாரை மறுத்துள்ளார் அன்சல். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள அவர், அப்போது தான் நியூயார்க்கில் இருந்ததாகவும், தான் ஒருபோதும் யாரையும் துன்புறுத்தவில்லை என்றும் அப்போது தாங்கள் காதலித்து வந்ததாகவும் இருவரது விருப்பத்தின் பேரிலேயே அந்த பாலியல் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். பாலியல் புகார் கூறிய கப்பியின் ட்விட்டர் பக்கம் இப்போது நீக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











