ஆட்டோக்கார அக்காவை ஹேப்பியாக்கிய அந்தகன் டீம்.. பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரனின் செம சேட்டை!

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா இந்த ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதே போல தனுஷின் 50வது படமான ராயன் வெளியாகி அந்த படமும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்ததாக பிரசாந்தின் 50வது படமாக அந்தகன் திரைப்படம் இன்று வெளியானது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் அந்தகன்.

Anthagan Prashanth Simran

டாப் ஸ்டார் பிரசாந்தின் அப்பா நம்ம மலையூர் மம்பட்டியான் தியாகராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் புரமோஷனை முன்னிட்டு ஆட்டோக்கார அக்காவுடன் அந்தகன் டீம் செய்த அலப்பறை வீடியோ வெளியாகியுள்ளது.

பிரசாந்தின் 50வது படம்: 1990-ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த். செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி , ஸ்டார், மஜ்னு, வின்னர் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ள பிரசாந்த்தின் 50-ஆவது படமாக அந்தகன் இன்று வெளியானது.

பெரிய அளவில் புரமோஷன்: சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரசாந்த் சினிமாவில் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் நிலையில், அந்தகன் படத்திற்கான புரமோஷன் பெரிய அளவில் நடத்தப்பட்டது. தளபதி விஜய் அந்தகன் ஆந்தம் பாடலை வெளியிட்டார். தொடர்ந்து ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்களுக்கு பிரசாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பேட்டியளித்துள்ளனர்.

ஆட்டோக்கார அக்கா ஹேப்பி: பிரசாந்த், சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் மூவரும் இணைந்து அந்தகன் படத்தை புரமோட் செய்யும் விதமாக ஆட்டோக்கார அக்கா ஒருவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவருடன் உரையாடி அவரை ஹேப்பியாக்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரசாந்துக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து கோட்: அந்தகன் படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேக் டு பேக் பிரசாந்த் படங்கள் வெளியாக உள்ள நிலையில், டாப் ஸ்டார் ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X