போயஸ் கார்டனில் ஏன் வீடு வாங்கினேனு இருக்கு.. தனுஷின் விரக்திக்கு ரஜினி காரணமா? பிரபலம் சொன்ன தகவல்?
சென்னை: ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், முதல் படத்தில் நடிக்கும் பொழுது, சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவே இல்லை. அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், துரோகங்களை தாண்டி இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் கை தட்டல் தான் காரணம். ஒல்லியாக, கருப்பாக இருந்த என்னிடம், எப்படி நீங்கள் கனெக்ட் ஆனீர்கள் என்று தெரியவில்லை. இங்கிலீஷ் ஒழுங்காக பேச தெரியாத என்னை, இங்கிலீஷ் படத்திலேயே நடிக்க வைத்தீர்கள்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினி சார் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. என் 16 வயதில் போயஸ் கார்டன் சென்று ரஜினியின் வீட்டை பார்க்க ஆசைப்பட்டேன். அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சி அவர் வீட்டை பார்த்தேன். அருகிலேயே ஜெயலலிதாம்மா வீடும் இருந்தது. அப்போதில் இருந்தே போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டும் என்பது என் அசை. ஆனால், போயஸ் கார்டனில் நான் வீடு கட்டியிருப்பது இவ்வளவு பேச்சாக எழும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு கட்டியிருக்கவே மாட்டேன் என பேசி இருந்தார். தனுஷ் இப்படி பேசியது இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

இது தான் காரணம்: இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், ஏன்டா வாங்குனோம் என்ற வார்த்தையை தனுஷ் சொல்லி இருந்தார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது. அவர் இவ்வளவு விரக்தியாக பேச என்ன காரணம் என்பது குறித்து சில விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. தனுஷ் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டை விட மிகவும் பிரம்மாண்டமாக கட்டி இருக்கிறார். அந்த வீடு கட்டும் போது அது ஐஸ்வர்யாவின் இடம் என்று சொல்லப்பட்டது. ரஜினி பணம் கொடுத்தார் என்றும் சொல்லப்பட்டது. தற்போது தனுஷ் சொன்னதை கேட்கும் போது அது முழுக்க முழுக்க தனுஷின் உழைப்பால் வந்தது என்று தெரிகிறது.
தவறான செய்தி: அந்த வீட்டில் தனுஷ் மட்டும் தான் இருக்கிறார், தனுஷின் அப்பா, அம்மா கூட இல்லை, மகன்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். அவரின் அப்பா அம்மா தனுஷின் திநகர் வீட்டில் இருக்கிறார்கள், அந்த தி நகர் வீட தனுஷின் அலுவலகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வீட்டில் தான் தற்போது அவரின் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்த திநகர் வீட்டை காலி பண்ண சொன்ன போது, தனுஷ் காலி செய்வதாக கூறியிருந்தார். அதற்குள், கட்டிட உரிமையாளர் தட்டுமுட்டு சாமானை அந்த வீட்டில் வைத்ததால், பிரச்சனை ஏற்பட்டு, தனுஷ் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் ஆள்வைத்து தனுஷ் மிரட்டியாக கூறியதை அடுத்து, அந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் தான் ராயன் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அப்படி பேசி இருந்தார்.
ரஜினி தான் காரணமா: ஆனால், ஊடகம் மற்றும் சோஷியல் மீடியா அனைத்திலும் போயஸ் கார்டனில் ஏன் வீடுவாங்கினோம் என்று நினைக்கும் அளவிற்கு தனுசை கொண்டு வந்தது ரஜினி தான். இதற்கு பின்னாடி ரஜினி இருக்கிறார், ரஜினி குடும்பம் இருக்கிறது என்றும், தனுஷ் 16 வயதிலேயே துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துவிட்டார், அப்போ அவர் நடிகர் என்று ரஜினிக்கு தெரியாதா, செக்யூரிட்டிக்கு தெரியாதா என்றெல்லாம் இணையவாசிகள் கேட்டு வருகின்றனர் என்று அந்த வீடியோவில் அந்தணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











