Jawan - ஷாருக்கான் போல் இங்கிருப்பவர்கள் செய்வார்களா?.. லியோ 1000 கோடிலாம் வசூலிக்காது.. அந்தணன் அதிரடி
சென்னை: Jawan (ஜவான்) போல் லியோ படம் 1000 கோடி ரூபாயை வசூலிக்காது ஜவான் படம் வேண்டுமானால் அந்தத் தொகையை வசூலிக்கும் என அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் உருவாகியிருக்கிறது. அட்லீ இயக்கத்தில் அவருடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோனே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்தப் படம் அட்லீக்கு முதல் ஹிந்தி படம் என்பதால் இதில் பந்தயம் அடிக்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நேற்று முன் தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஷாருக்கான் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சென்னையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்து இங்கு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது ஜவான் படக்குழு என்ற கருத்து பலமாகவே எழுந்திருக்கிறது.
ஜவான் ட்ரெய்லர்: ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் முடிந்த கையோடு நேற்று ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை கொடுத்திருக்கின்றனர். அதேசமயம் சர்தார், மணி ஹெய்ஸ்ட் உள்ளிட்டவைகளின் கலவை போல் ஜவான் இருக்குமோ என்ற சந்தேகத்தை ட்ரெய்லரை பார்த்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.
அதேசமயம் மேக்கிங்கை எல்லாம் வைத்து பார்க்கும்போது படம் கண்டிப்பாக மெகா ஹிட்டடிக்கும் என்றும் கூறிவருகின்றனர் ரசிகர்கள். மேலும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் படம் 1000 கோடி ரூபாய் வசூலை எடுத்ததால் ஜவானும் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இணையும் என்றும் கணித்துள்ளனர்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து மேடையில் நாடி தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார் ஷாருக்கான். இங்கே இருக்கும் ஹீரோக்கள் இதுபோன்று மற்ற மாநிலங்களுக்கு சென்று ஆட்டம் போட்டு நிகழ்ச்சி நடத்துவார்களா?.. இங்கு நடக்கிற நிகழ்ச்சியிலேயே மற்ற நடிகர்கள் வந்தால் யார் முதலில் பேசுவது என்ற பஞ்சாயத்து ஓடும். அதனாலேயே தனித்தனியாக நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
லியோ 1000 கோடியா?: இதில் எங்கிருந்து லியோ படம் 1000 கோடி ரூபாய் வசூலை எடுக்கும். ஜவான் வேண்டுமானால் 1000 கோடி ரூபாய் வசூலை எடுக்கும். விஜய்யின் லியோ நன்றாக இருந்தால் 500 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய்வரைதான் வசூல் செய்யும்" என தெரிவித்திருக்கிறார். முன்னதாக லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











