சிவக்குமார் வீட்டில் பிரச்னை?.. ஈசிஆரில் குடியேறுகிறார்களா சூர்யா, ஜோதிகா?.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா - ஜோதிகா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார்.
மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவானது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியான அப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நத்தார் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். சூர்யாவின் கரியரிலேயே அந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக அமைந்திருந்தது. ஆனால் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார்.அபடமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

தொடர்ந்து வதந்தி: சூழல் இப்படி இருக்க ஜோதிகாவால் சூர்யா வீட்டுக்குள் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமின்றி சூர்யா மும்பைக்கு சென்று செட்டில் ஆகவே ஜோதிகாதான் காரணம் என்றும்; சென்னை வந்தால்கூட சிவகுமாரை ஜோதிகா சந்திப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஜோதிகா கொடுத்த ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் சூர்யா, ஜோதிகா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சென்னை தி.நகரில் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் இணைந்து பிரமாண்டமாக பங்களா கட்டினார்கள். அது அனைத்து வசதிகளும் உள்ளதுதான். ஆனால் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பைக்கு சென்று செட்டில் ஆகியிருக்கிறார்கள்.
ஈசிஆரில் வீடு: ஜோதிகா சென்னைக்கு வரும்போதுகூட தி.நகர் வீட்டில் தங்குவதில்லைதான். மாறாக ஈசிஆரில் அவர்கள் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு சமீபத்தில் ஒரு பார்ட்டி போன்ற் நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். சிவக்குமார் உள்ளிட்டோரும் சென்றார்கள். பொதுவாக சிவக்குமார் நிறைய நெறிகளை கடைப்பிடிப்பவர். அதுமட்டுமின்றி மாமனார் சொல்லும் அட்வைஸ்களை எந்த மருமகளும் கேட்பதில்லைதானே" என்றார்.


Click it and Unblock the Notifications











