Ameer - பருத்திவீரன் பிரச்னை.. அமீருக்காக 10 கோடி ரூபாய் கேட்ட வெற்றிமாறன்?.. ஷாக்கான சூர்யா..?

சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் பிரச்னையில் வெற்றிமாறன் தலையிட்டிருப்பதாகவும் 10 கோடி ரூபாய் பேரம் பேசினார் என்றும் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டில் பருத்திவீரன் பஞ்சாயத்து சில வாரங்களுக்கு முன்பு பற்றி எரிந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டில் ஒன்றில் நக்கலான உடல்மொழியுடன் அமீரை தரம் தாழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக அமீர் ஒரு திருடன். மார்க்கெட்டில் ஓடாத குதிரை என்று பேசியது எல்லாம் பெரும் கண்டனத்தை சம்பாதித்தது.

Anthanan has said that Vetrimaaran intervened in the Paruthiveeran issue

படைப்பாளிக்கு அவமரியாதை: இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு படைப்பாளியை இப்படியா அவமதிப்பது என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதேபோல் இந்தப் பேச்சை பார்த்த அமீரும் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அமீரின் அறிக்கைக்கு அடுத்ததாக சசிகுமார், சமுத்திரகனி, பொன்.வண்ணன், கரு.பழனியப்பன், பாரதிராஜா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் அமீருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.

கரு.பழனியப்பன்: இயக்குநர் கரு.பழனியப்பன் தனது அறிக்கையில் ஒருபடி மேலே சென்று இந்த விவகாரத்துக்கு பின்னால் சிவக்குமார் குடும்பம் இருப்பதாக சந்தேக நிழல் விழுவதை தடுக்க முடியவில்லை. ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து ஞானவேல் ராஜாவும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

போலி வருத்தம்: சிவக்குமாரின் பெயர் இந்த விவகாரத்துக்குள் வந்ததும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் அது போலியான வருத்தம் என சசிகுமார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'ப்ரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்கு செல்லாது. பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்கள். பணத்தை திருப்பி கொடுங்கள். நீங்கள்தான் அம்பானி ஃபேமிலியாச்சே' என்று குறிப்பிட்டிருந்தார்.

மௌனமான ஞானவேல்: அமீருக்கு பெருகிய ஆதரவை கண்டு ஞானவேல் ராஜா அமைதியாகிவிட்டார். இந்த சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "அமீருக்கு ஆதரவாக இத்தனை பேர் வருவார்கள் என்பதை ஞானவேல் ராஜா நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால்தான் அமைதியாகவிட்டார். அத்தனை படைப்பாளிகளும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

தயாரிப்பாளர் கவுன்சில்: இதனையடுத்து அவர் தற்போது நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு மனு அளித்திருக்கிறார். எனக்கும் அமீருக்கும் நடக்கும் பிரச்னையை பேசி தீர்த்துவிடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையே இந்தப் பிரச்னையில் வெற்றிமாறன் தலையிட்டிருக்கிறார். அவர் ஞானவேலுவிடம் அமீருக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஷாக்கான சூர்யா: இதனை சூர்யாவும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் வாடிவாசல் படத்தில் இப்போது நடித்துவருவதால் சூர்யா எந்த கருத்தையும் ஓபனாக பேசவில்லை. ஆனால் 10 கோடி ரூபாய் அதிகம் 5 கோடி ரூபாய் கொடுக்கலாம் என்ற மனநிலையில் அவர் இருக்கிறார். ஞானவேல் ராஜாவோ 3 கோடி ரூபாய் கொடுக்கலாம் என்ற மைண்ட் செட்டில் இருப்பதாகத்தான் தகவல்கள் வருகின்றனர். அதேசமயம் நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை அமைதியாக இருக்கலாமா என்ற எண்னத்திலும் ஞானவேல் ராஜா இருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X