மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. உடல்நிலை மோசமானதற்கு இதுதான் காரணமா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங்கில் தவறாமல் கலந்துகொண்ட அவர் திடீரென நேற்று முன் தினம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் சூழலில்; பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அதிர்ச்சி தரும் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இன்று ட்ரெய்லர் ரிலீஸாகவிருக்கிறது. இதில் அவருடன் மிகபெரிய நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கிறது. முதன்முறையாக ஞானவேலுவுடன் ரஜினி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் படத்தின் டீசர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.

கூலி: வேட்டையன் படத்தை முடித்த கையோடு கூலி படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரஜினி. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். 73 வயதிலும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருவது அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. மேலும் மீசை வைத்த குழந்தையப்பா என்று வைரமுத்து எழுதியது ரஜினிக்கு பக்காவாக பொருந்துகிறது என்றும் புகழ்ந்துவருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதி: நிலைமை இப்படி இருக்க ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். நன்றாக இருந்தவர் ஏன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அங்கு வைத்து அவருக்கு சிறுநீரக சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அடிவயிற்று ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் செய்யப்பட்டது.
இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ்: நேற்று முன் தின இரவிலிருந்து நேற்று மாலைவரை அவருக்கு அந்த பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இதனையடுத்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், ரஜினி நலமுடன் இருக்கிறார் என்றும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று அறிவித்திருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் பற்றி பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தணன் வீடியோ: அவர் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது. 74 வயதான ரஜினிகாந்த் பார்ப்பதற்கு இளமையாக இருக்கலாம். ஆனால் அவர் இளைஞர் எல்லை. அதனை கருத்தில் கொண்டுதான் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்த வேண்டும்.
படுத்திய லோகேஷ்: ஆனால் லோகேஷோ ரஜினிகாந்த்தை மழையில் நனையும்படியான காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். ஏற்கனவே விசாகப்பட்டினத்தின் தண்ணீர் ரஜினிக்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்தது. அதனால் சென்னையிலிருந்து அவருக்கென்று தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அதனைத்தான் அவர் ஷூட்டிங்கில் குடிப்பதற்கு பயன்படுத்தினார். இப்படி தண்ணீராலும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம். இதை எல்லாம் கருத்தில்கொண்டு இயக்குநர்கள் இனி ரஜினியை இயக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











