Rajini - பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ரஜினி இப்படித்தான் பழகுவாரா?.. அந்தணன் சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வி காரணமாக சின்ன சறுக்கலை சந்தித்த அவர் ஜெயிலர் படத்தால் மீண்டும் கம்பேக் கொடுத்துவிட்டார். அதன் காரணமாக அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.

ரஜினிகாந்த்துக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களிலிருந்து செலிபிரிட்டிகள்வரை ரஜினியின் தாக்கம் இல்லாமல் இல்லை. அந்த அளவுக்கு தன்னுடைய ஸ்டைல், நடிப்பு என அனைத்திலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். சினிமாவுக்கு யார் நடிக்க வந்தாலும் ரஜினியை போல் ஆக வேண்டும் என்றுதான் உள்ளே வருவார்கள். அதேபோல் இப்போது உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித் போன்றோரும்கூட சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்பட்டது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Anthanan Open Talks about how Rajini interacts with the neighbours

சறுக்கல்: ரஜினிகாந்த் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் வசூலை ஈட்டிக்கொண்டிருந்தன. இடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்ததோடு மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தன. மேலும் அந்த இரண்டு படங்களின் தோல்வி காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

கம்பேக் கொடுத்த ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார் ரஜினிகாந்த். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினிகாந்த்தின் நடிப்பு, நெல்சனின் மேக்கிங் என அத்தனையுமே க்ளிக் ஆனதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். இதன் காரணமாக ரஜினிகாந்த் தரமான கம்பேக் கொடுத்துவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் அவர் கமிட்டானார். ஒன்று லால் சலாம். இன்னொன்று வேட்டையன். தனது மகள் இயக்கியிருக்கும் லால் சலாமில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. படம் நாளை வெளியாகவிருக்கிறது. ஜெய்பீம் படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் நடந்துவருகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

Anthanan Open Talks about how Rajini interacts with the neighbours

கூடும் கூட்டம்: இப்படி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துவருவதால்தான் ரஜினிகாந்த்துக்கென்று ரசிகர்கள் கூட்டம் அப்படியே இருக்கிறது. மேலும் அவரை பார்க்க வேண்டும் என அவரது வீட்டுக்கு முன் பண்டிகை நாட்களில் கூடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்கள் அப்படி கூடியபோது ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் கொந்தளித்து தீர்த்துவிட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே போயஸ்கார்டனில் இருந்த மற்றவர்கள் சாதாரணமாக வெளியில் வர முடியாத நிலைதான் இருந்தது. இப்போது ரஜினிகாந்த் ரசிகர்களால் அவரது வீட்டுக்கு அருகே இருப்பவர்களும் துயரமடைந்து இருக்கிறார்கள். கடைசியாக ஒரு பெண் வந்து மீடியாவில் பேசிவிட்டு சென்றாரே. அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ரஜினிகாந்த் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எப்படி பழகுகிறார் என்று.

அவர் நல்ல முறையில் பழகியிருந்தால் அந்தப் பெண் ஏன் மீடியா முன் வந்து பேசப்போகிறார். நேராக ரஜினியின் வீட்டுக்கு தனியாக சென்று பக்குவமாக எடுத்து சொல்லியிருப்பாரே. நடிகர்கள் எல்லாம் திரையில்தான் நன்றாக இருப்பார்கள் நிஜத்தில் இல்லை என்பதற்கு இது உதாரணம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X