Ameer - அமீரை சூர்யா அசிங்கப்படுத்தினார்.. மேலிடத்தில் பேசிட்டோம்னு சொல்லி மிரட்டினாங்க.. அந்தணன் ஷேரிங்ஸ்
சென்னை: Paruthiveeran Controversy (பருத்திவீரன் பஞ்சாயத்து) அமீரை சூர்யா பருத்திவீரன் விவகாரத்தின்போது சில விஷயங்களில் அசிங்கப்படுத்தினார் என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய பஞ்சாயத்து ஓயந்த சூழலில் கோலிவுட்டில் அடுத்ததாக பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியிருக்கிறது. கார்த்தி 25 விழாவுக்கு அமீர் செல்லாததில் ஆரம்பித்த பேச்சு ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் பருத்திவீரன் தொடர்பான பிரச்னை குறித்து பேசியதிலிருந்து இது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.

என்ன நடந்தது?: பருத்திவீரன் படத்தில் அமீர் நிறைய பணத்தை திருடிவிட்டார். எனது காசில்தான் அவர் தொழிலே கற்றுக்கொண்டார். பருத்திவீரன் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என்று யாரும் அமீரிடம் கேட்கவில்லை. எனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக அவர்தான் அந்தப் படத்தை இயக்கிக்கொடுத்தார் என்று பேசினார் ஞானவேல் ராஜா.
அமீரின் பதில்: இதனையடுத்து பதிலடி கொடுத்த அமீர், 'பருத்திவீரன் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே பணம் இல்லை என்று பாதியிலேயே ஞானவேல் ராஜா ஓடிவிட்டார். என்னை மிரட்டி அந்தப் படத்தை எழுதி வாங்கிவிட்டார்கள். என்ன நடந்தது என்பதை தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக' குறிப்பிட்டிருந்தார்.
அமீருக்கு ஆதரவு: அமீரின் அந்த பதிலை பார்த்த சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்டோர் தங்களது ஆதரவை அமீருக்கு கொடுத்தனர். இருவருமே அந்தப் படத்தில் நடந்த பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை போட்டுடைத்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனும் தனது ஆதரவை தெரிவிக்க; அடுத்ததாக பாடலாசிரியர் சினேகனும் தனது ஆதரவை கொடுத்தார்.
அந்தணன் பேட்டி: ஆனால் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை. இந்த சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் இந்த விஷயம் குறித்து பேசுகையில், "அமீருக்கும் ஞானவேலுவுக்கும் இடையே நடந்தது பண பிரச்னை. அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அவருக்கு வேலை தெரியாது என்றெல்லாம் ஞானவேல் ராஜா பேசியிருக்கக்கூடாது.
படத்துக்கு உரிமை: பருத்திவீரன் படத்துக்கு ஞானவேல் ராஜா 2 கோடி ரூபாய்தான் பணம் கொடுத்தார். அதனையடுத்து 1 கோடியே 65 லட்சம் ரூபாயை அமீர்தான் கடன் வாங்கி படத்தை முடித்தார். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் ஸ்டூடியோ க்ரீன் வழங்கும் பருத்திவீரன் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனை பார்த்து கோபமான அமீர் சூர்யா உள்ளிட்டோரிடம் ஃபோன் செய்து பாதியில் சென்றுவிட்டு இப்போது ஏன் படத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என்று கேட்டார்.
அசிங்கப்படுத்திய சூர்யா: உடனடியாக படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது சூர்யா கிளம்பி ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நீங்கள் எவ்வளவு செய்தீர்களோ சொல்லுங்கள் அதை வட்டியோடு உங்களுக்கு தருகிறேன். படத்தை கொடுத்துவிடுங்கள் என்றார். அதற்கு அமீரோ இஸ்லாமில் வட்டி என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நீங்கள் அசலை மட்டும் கொடுங்கள் என்று சொன்னார்.
பிறகு சூர்யா சரி ஒரு கோடி ரூபாய் தருகிறேன். நீங்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலையை ஆரம்பியுங்கள் என்று சொல்லி சென்னை வந்தவர் முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாயை அமீருக்கும் கொடுத்துவிட்டார். ஆனால் இடையில் யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை 30 லட்சம் ரூபாய் கொடுத்ததோடு சூர்யாவும் கழன்றுவிட்டார். அதுமட்டுமின்றி சில நாட்கள் கழித்து தான் கொடுத்த 30 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்கும்படியும் அமீரிடம் தனது மேனேஜர் தங்கதுரையை வைத்து கேட்கவும் ஆரம்பித்தார்.
தொடர்ந்து தங்கதுரை அமீரிடம் பணத்தை கேட்க; பொறுமையிழந்த அமீர் சூர்யாவிடம் நேரடியாக பேச முடிவெடுத்து அவருக்கு ஃபோன் செய்தார். ஆனால் தங்கதுரை அமீரிடம் லைனில் வந்து என்ன சாருக்கு ஃபோன் பண்ணிருக்கீங்க என கேட்டார். அதற்கு அமீரோ நீங்க ஏன் வரீங்க நான் சூர்யாவுக்குதானே ஃபோன் செய்தேன் என சொல்ல; அதற்கு அவரோ இல்லை என்ன என்று சூர்யா சார்தான் கேட்க சொன்னார் என கூறினார். இது அமீருக்கு உகந்ததாக இல்லை. என்ன இப்படி அசிங்கப்படுதுறீங்க என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார்.
கடைசிவரை அந்த 1 கோடியே 65 லட்சம் ரூபாயையும் அவர்கள் அமீருக்கு வழங்கவில்லை. 50 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லி மதுரை ஏரியா ரைட்ஸை கேட்டார்கள். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு அழைத்து சென்று மேலிடத்தில் பேசிவிட்டோம் நீங்கள் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என சொல்லி பருத்திவீரன் படத்தையும் எழுதி வாங்கிவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











