தளபதி 69ன் கதை இதுதானா?.. விஜய்யின் கதாபாத்திரம் வேற லெவலில் இருக்குமாம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு திரைத்துறையிலிருந்து விலகவிருக்கிறார். இந்தச் சூழலில் தளபதி 69 படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். பவதாரிணி உயிரிழப்பால் படத்தின் ஷூட்டிங் இடையில் சில நாட்கள் தடைபட்டது. அதனையடுத்து மீண்டும் இப்போது ஷூட்டிங் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அரசியல் என்ட்ரி: விஜய் GOAT படத்தில் கமிட்டானபோதே அதுதான் அவருடைய கடைசி படம். விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பலரால் கூறப்பட்டது. அதற்கெல்லாம் விஜய் அமைதியாக இருந்தார். திடீரென சில மாதங்களு முன்பு, 'தமிழக வெற்றிக் கழகம்'என்ற கட்சியை தொடங்குவதாக எந்தவித அலட்டலும் இல்லாமல் சிம்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துவிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் வேலைகளும் ஆரம்பித்திருக்கின்றன.
படத்துக்கு நோ: தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போடும் திட்டத்தையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்ததால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர். அதேசமயம் விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில்: விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிடவும் இல்லை; வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு எடுத்திருக்கிறார். அநேகமாக அந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதில் மக்களின் பல்ஸை பார்த்துவிட்டு அடுத்தடுத்த தேர்தல்களில் விஜய் கூட்டணியை நோக்கி நகரலாம் என்றும் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
கடைசி படம்: சூழல் இப்படி இருக்க விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் பலரிடம் இருக்கிறது. முதலில் வெற்றிமாறன் பெயர் அடிப்பட்ட சூழலில் இப்போது ஹெச்.வினோத்தின் பெயர் பலமாகவே அடிபடுகிறது. விஜய்யும் வினோத்தும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கதை இதுதான்?: இந்நிலையில் தளபதி 69 படத்தின் கதை குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "இந்தப் படத்தில் மக்களுக்காக போராடும் ஒரு தலைவனாக விஜய் நடிக்கவிருக்கிறார். இப்போது ஸ்க்ரிப்ட் ஒர்க் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது""என்றார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். முக்கியமாக அரசியல் பிரவேசத்துக்கு இந்தக் கதையும், விஜய்யின் கதாபாத்திரமும் பெரிதும் பாசிட்டிவ்வாக இருக்கும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











