இர்பானுக்கு இந்த முறையும் தண்டனை கிடைக்காது போல.. அந்தணன் சொன்ன மேட்டர்.. எங்கபோய் முடியப்போகுதோ!

சென்னை: இர்பான் கார் மோதி மூதாட்டி பலி, கருவில் இருக்கும் பாலினத்தை அறிவித்து சர்ச்சை என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வந்த குக் வித் கோமாளி பிரபலம் இர்பான் புதிதாக வெளியிட்ட டெலிவரி வீடியோவால் வசமாக மாட்டியுள்ளார். சினிமா பிரபலங்களை தாண்டி இந்த வீடியோ லாகர்ஸ் தங்கள் வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அனன்யா பாண்டே நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான கன்ட்ரோல் வெப்சீரிஸில் கூட இதே கதை தான். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மற்றும் சிக்கல்கள் உள்ளிட்டவற்றை அந்த வெப்சீரிஸ் விரிவாக கூறியிருந்தது.

irfan anthanan controversy

பல பிரபலங்கள் ஆசை ஆசையாக சோஷியல் மீடியாவில் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வியூஸ்களை அள்ளி பணம் சம்பாதிக்க அத்தனை பிரைவேட்டான விஷயங்களையும் பப்ளிக் செய்து அதன் பின்னர் அதே வீடியோவால் சர்ச்சைகளில் சிக்கி ஏகப்பட்ட துயரங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், இதுவரை இர்பான் எந்த தண்டனையையும் அனுபவிக்கவில்லை என்றும் இந்த முறையும் அவர்மீது இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என அந்தணன் அதிர்சியளித்துள்ளார்.

யூடியூபர் இர்பான்: இர்பான் வியூ எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து உணவுகளை ருசி பார்த்து இர்பான் வெளியிடும் வீடியோக்களை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து அவருக்கு ஆதரவு அளிக்க அவர் அதிரடியாக பிரபலமாக மாறி குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராகவே ஆனார். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலருடன் நெருங்கி பழகி போட்டோக்களை வெளியிட்டார். விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், அங்கேயே சென்று பிரியா ஆனந்த் உடன் எல்லாம் விளையாடிய வீடியோக்களை வெளியிட்டார். சமீப காலமாக சர்ச்சையில் அதிகம் சிக்கி வரும் இர்பான் குறித்து வீடியோ ஒன்றில் அந்தணன் பேசிய நிலையில், பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.

தொப்புள் கொடியை கட் செய்து சர்ச்சை: கடை திறப்பு விழாவில் ரிப்பன் கட் செய்வது போல நிவேதிதா எனும் பெண் மருத்துவர் இர்பான் நீங்களே தொப்புள் கொடியை கட் செய்யுங்க என அனுமதி அளிக்க அவரும் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தொப்புள் கொடியை கட் செய்த வீடியோவை ஷேர் செய்து பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டார். இர்பான் தப்பு மேல தப்பு செய்துக் கொண்டே போகிறார் என்றும் மன்னிப்பு கூட கேட்பதில்லை. வீடியோ டெலிட் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறார் என அந்தணன் வசமாக கேள்விகளை அடுக்கி விளாசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தண்டனையே கிடைக்காது: இதற்கு முன்னதாக இர்பான் கார் விபத்து சர்ச்சையில் சிக்கும் போது அவரது நண்பர் தான் கார் ஓட்டினார் என எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் அதன் பின்னர் துபாய்க்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை அறிந்துக் கொண்டு வந்து சென்னையில் விழா நடத்தி அதை ரிவீல் செய்து வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அப்போதும் அவருக்கு எந்த தண்டனையும் கொடுக்கப்படாத நிலையில், அடுத்து தொப்புள் கொடியை கட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த முறையும் அவர் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். மீண்டும் இர்பான் மன்னிப்பு என்று சொன்னால் விட்டு விடுவார்கள். அவருக்கு எந்தவொரு தண்டனையும் கிடைக்காது என்றும் தண்டனை கொடுக்கப்பட்டால் மட்டுமே இர்பான் இதுபோன்ற தவறுகளை இனிமேலும் செய்யமாட்டார் என அந்தணன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X