ஜப்பான் படுதோல்வி.. ராஜுமுருகன் கேரியரை காலி பண்ணிட்டாரு கார்த்தி.. அந்தணன் பேட்டி!
சென்னை: ஜப்பான் படுதோல்வியால் இயக்குநர் ராஜுமுருகன் கேரியரே காலி என்று அந்தணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு தியேட்டரில் வெளியானத் திரைப்படம் ஜப்பான்.

இந்த படத்தை, ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி இருந்தார். இதில் ஜோக்கர் படம் தேசிய விருது வென்று அசத்தியது.
ஜப்பான்: திறமை வாய்ந்த இயக்குனர் ராஜு முருகனுடன் கார்த்தி கூட்டணி அமைத்ததால் ஜப்பான் படத்தை பார்க்க மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, படம் வெளியான முதல் நாளே படு மோசமான விமர்சனத்தை பெற்றது.
மோசமான விமர்சனம்: இதனால், அடுத்தடுத்த நாட்களில், தியேட்டருக்கு ஆட்களே வராததால், பல திரையரங்களில் ஜப்பான் படத்தை எடுத்துவிட்டு ஜிகர்தாண்டா டபுள்ஸ் எக்ஸ் மற்றும் லியோ படத்தை திரையிட்டனர். தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து ஹிட் படத்தை கொடுத்த கார்த்தியின் சினிமா கேரியரில் இத்திரைப்படம் பிளாப் படமாக அமைந்துள்ளது.
கமர்ஷியல் படம் செட் ஆகல: ஜப்பான் படு தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டி அளித்துள்ளார். அதில், கமர்ஷியல் இயக்குநர்கள் என தனி இயக்குநர்கள் இருக்கிறார்கள் அவர்களால் மட்டும் தான் கமர்ஷியல் படம் எடுக்க முடியும். ஆனால், ராஜூமுருகன் போல சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் படம் எடுக்க வேண்டும் என்றால், கார்த்தி போன்ற கமர்ஷியல் நடிகர்களை வைத்துக்கொண்டு படம் எடுக்ககூடாது.
தோல்விக்கு கார்த்தி தான் காரணம்: கார்த்தி இந்த படத்தில் இயக்குநரின் ஸ்டைலில் நடித்து இருந்தால், படம் இந்த அளவிற்கு அடி வாங்கி இருக்காது. இந்த படம் இவ்வளவு பிளாப் ஆனதற்கு காரணம் கார்த்தி தான் அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











