Suchitra: தனுஷ் மீனா திருமணமா? சுசித்ரா இப்படி சொல்லலாமா.. அந்தணன் ஆதங்கம்!
சென்னை: பிரபல பின்னணி பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்தும் நடிகர் தனுஷ் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நேற்று சோஷியல் மீடியாவையை திணறடித்துவிட்டார். இவர்கள் பற்றி கூறியது மட்டுமில்லாமல் நடிகை மீனா குறித்து பேசியது தற்போது பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பாடகி சுசித்ரா, சுசீ லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் நடிகைகள் ஆண்ட்ரியா, த்ரிஷா, நிக்கி கல்ராணி, அனுயா பகவத் உள்ளிட்ட சிலர் இருந்த நிலையில், இந்த புகைப்படங்கள் அப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த விஷயம் அடங்கிய நிலையில், தற்போது பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

சுசி லீக்ஸ் சுசித்ரா: சுசித்ரா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இதை திருமணமான இரண்டு வருடத்திலேயே நான் கண்டுபிடித்தேன், ஒரு மருத்துவரும் உன் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று என்னிடம் கூறினார். தனுஷூம் , கார்த்திக் குமாரும் நீண்ட நேரமாக ஒரு அறையில் தனியாக இருந்தார்கள் என்று கூறினார். அது மட்டுமில்லாமல், சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் மற்றும் என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் என்றார்.
தனுஷ் தான் காரணம்: இருவரும் பிராங்க் செய்கிறேன் என்று இப்படி செய்துவிட்டார்கள். ப்ராங்க் செய்ய ஏதாவது ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்டதால், கார்த்திக் என் அக்கவுண்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார். இயக்குனர் ஜவகரின் மொபைல்போனை வாங்கி கார்த்திக்கிற்கு கண்டபடி மெசேஜ் செய்வார் தனுஷ். அதுவும் ஒருவகையான ப்ராங்க் என்று சொல்வார்கள். இந்த பிராங்க் விஷயத்திற்கு த்ரிஷாவே தானாக தான், போட்டோக்களை கோடுத்தார். இதனால் தான் அவங்க ஒரே ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு, இதுவரை பாதிக்கப்படாம இருக்குறாங்க என்று பேசிக்கொண்டு இருந்த தனுஷ், மீனாவுக்கும் திருமணம் நடக்கும் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
உண்மையா, பொய்யா: இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பேட்டியில், நேற்று சுசித்ரா, தனுஷ், மீனா குறித்து பேசி இருந்தார். இது என்ன மனநிலையில் அவர் சொன்னார் என்று தெரியவில்லை. அதை கேட்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் என்றால், ஏற்கனவே தனுஷ் விவாகரத்து செய்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவர் குறித்து பல செய்திகள் இணையத்தில் பரவி வரும் இந்த நேரத்தில், சுசித்ரா சொன்னது, உண்மையா பொய்யா என தெரியாத ஒரு இடத்தில் நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அவர் போகிற போக்கில் இதை சொல்லி இருந்தாலும், இது போக போக விஸ்வரூபம் எடுக்கும்.
வலைப்பேச்சு அந்தணன்: சுசித்ரா யாரோ ஒரு பெண்ணாக இருந்து இருந்தால், இந்த விஷயம் இந்த அளவிற்கு பேசுபொருளாகி இருக்காது. அவர் சினிமாவில் 20 ஆண்டுக்கும் மேலாக இருந்தவர், தனுஷ், த்ரிஷா என அனைவருடனும் பழகியவர் என்பதால், இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது. இருந்தாலும் இந்த பேட்டியில் தனது மொத்த ஆதங்கத்தையும் தொட்டி தீர்த்து இருக்கிறார். இந்த விஷயத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர் சுசித்ரா, தற்போது தான் மனதளவில் தயாராகி இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications