பல மணி நேர மேக்கப்.. ஆளவந்தான் படத்திற்காக கமல் பட்டபாடு? அந்தணன் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

சென்னை: ஆளவந்தான் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அந்த படத்திற்காக கமல்ஹாசன் பட்டபாடு குறித்து வலைப்பேச்சு அந்தணன் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ஆளவந்தான்.

Anthanan shared an interesting experience during the shooting of Aalavandhan

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஆளவந்தான் ரீ ரிலீஸ்: ஆளவந்தான் படம் வெளியாகி 22 ஆண்டுகளான நிலையில், இப்படத்தை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பெரிய பட்ஜெட் படம்: ஆளவந்தான் ரீ ரிலீஸ் ஆவது குறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், ஆளவந்தான் படம் எடுக்கும் போது கமல், தயாரிப்பாளரிடம் பட்ஜெட் என்ன என்று கேட்க, அவர் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கூறியதால், படத்தில் கதையில் சில மாற்றம் செய்யப்பட்டு காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து, படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறியது.

உண்மையான துப்பாக்கி: படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, கமல் தனது உண்மையான துப்பாக்கியை கொண்டுவந்தார். இந்த விஷயம் அந்த காலத்தில் பத்திரிக்கையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ரசிகர்கள் திரண்டுவிட்டதால், அங்கு படப்பிடிப்பு நடித்த முடியாமல் போக பல கஷ்டத்திற்கு இடையே முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

பல கோடியில் செட்: இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால், சென்னையில் காஷ்மீர் போல செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதாவது மூட்டை மூட்டையாக கல் உப்புகளை வாங்கி கொண்டு வந்து கொட்டி அதன் மீது, தர்மாகோல்களை உடைத்து உடைத்து செட் போட்டுள்ளார்.

பல மணி நேரம் மேக்கப்: மேலும், இந்த படத்தில் கமல், அண்ணன், தம்பி என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் நந்தா என்ற கதாபாத்திரத்திற்காக உடலை கடுமையாக அதிகரித்து இருப்பார். அதில், நந்தாவின் உடல் முழுவதும் பச்சை குத்தியது போல படம் வரையப்பட்டு இருக்கும். இதற்காக அதிகாலை 2 மணிக்கு செட்டுக்கு வரும் கமலுக்கு பல மணி நேரம் மேக்கப் போடப்படும்.

இந்த மேக்கப் போட்டால் வாய் திறக்க முடியாது என்பதால், ஸ்ட்ராவில் மட்டும் அவருக்கு ஜூஸ் கொடுக்கப்படும் என்று ஆளவந்தான் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவலை அந்தணன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X