பிரதீப் ரங்கநாதனை அழிக்க பார்ப்பது யார்? நீங்க ஒன்னும் சிவகார்த்திகேயன் இல்ல.. விளாசிய பிரபலம்!
சென்னை: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிராகன் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். தயாரித்துள்ளது. இதில், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் என பலர் நடித்துள்ளனர்.இப்படம் வரும் 21ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அதில், பேசிய பிரதீப் ரங்கநாதன், சிலர் என்னை அடிக்கவும் செய்றாங்க. அது யார் என அந்த விஷயத்திற்குள் போக வேண்டாம். ஆனால், அவர்களுக்கு நான் சொல்லும் விஷயம் ஒன்னு தான், ஒரு செடி வளரும் போது சிலர் அந்த இலையை பிச்சி போட்டுட்டு போவாங்க, சிலர் அந்த செடியை மிதிச்சிட்டு போவாங்க, ஆனால், செடியின் வேர் ஸ்ட்ராங்காக வளர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த செடி மட்டும், அனைவரும் கொடுக்கிற வலியை தாங்கிக் கொண்டால், அது பெரிய மரமாக வளருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பேசி இருந்தார். அவரின் பேச்சு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வலைப் பேச்சு அந்தனன் பேசி உள்ளார்.

அந்தனன் பேச்சு: அதில்,லவ் டுடே என்ற அற்புதமான படத்தை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன், இன்றைய இளசுகள் அந்த திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். தற்போது வெளியாக இருக்கும் டிராகன் திரைப்படமும் லவ் டுடே படத்தைப் போல இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பல கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனமே, நஷ்டத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்து, பத்து மடங்கு லாபத்தை ஈட்டிய நடிகராக தற்போது பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார்.
ஏற்றுக்கொள்ள முடியாது: அனைவரின் பார்வையும் பிரதீப் ரங்கநாதன் மீது இருக்கும், இந்த சூழ்நிலையில் டிராகன் இசை வெளியீட்டு விழாவில் அவர் கண்ணீரும் கம்பலையுமாக பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது, அவர் தனுஷ் போல இருப்பதால் தனுஷ் தான், பிரதீப் ரங்கநாதனை அழிக்க பார்ப்பதாக அனைவரும் கூறி வருகிறார்கள். ஆனால், இப்படி ஒரு செயலை தனுஷ் செய்ய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சினிமாவில் அவரும் அடிபட்டு உதைபட்டு தான் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். வெறும் பெரிய இடத்து மருமகன் என்பதால் மட்டும் அவர் முன்னேறவில்லை. திறமை, அறிவு என அனைத்தையும் வளர்த்துக் கொண்டு உயர்ந்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன், தன்னுடைய இடத்திற்கு வந்துவிடுவார் என்கிற பயத்தில், தனுஷ் அவரை அழிக்க பார்க்கிறார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அழுவது என்ன பழக்கம்: பிரபதீப் ரங்கநாதன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல, அது தனுஷின் தலையில் விழுந்திருக்கிறது. முதலில் பிரதீப் ரங்கநாதன் மேடையில் இது போன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். ஹீரோக்களுக்கு ஒரு இமேஜ் இருக்கிறது. அப்படி இருக்கும் போது மேடையில் அழுவது, புலம்புவதை தயவு செய்து நிறுத்த வேண்டும். இது எந்த விதமான இமேஜையும் உங்களுக்கு ஏற்படுத்திதராது. உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ யாரோ அழுத்தம் கொடுத்து இருந்தால் கூட அதை தனிப்பட்ட முறையில், திரைக்குப் பின்னால் டீல் செய்வது தான் சரியாக இருக்குமே தவிர மேடையில் அதைப்பற்றி பேசி புலம்புவது எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்காது
சினிமாவில் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் வேலை கட்டாயம் நடக்கும், அது சிவகார்த்திகேயனுக்கும் நடந்து இருக்கிறது. அதை அவர் மேடையில் பேசி புலம்பினார். அதனால், மக்களுக்கு அவர் மீது சிம்பதி வந்தது. ஆனால், உங்களுக்கும் அந்த சிம்பதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள் என்று வலைப்பேச்சு அந்தனன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











