Ajith - ஜெயிலர், லியோ கலெக்ஷன் போட்டி.. அஜித் ரியாக்ஷன் இதுதான்.. அந்தணன் ஷேரிங்ஸ்
சென்னை: Ajith (அஜித்) ஜெயிலர், லியோ கலெக்ஷன் குறித்து அஜித்தின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ படம் வெளியானது. விஜய் ரசிகர்களை படம் திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக ரஜினிக்கு போட்டி விஜய்தான் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்ததால் இந்தப் படத்தின் ரிசல்ட்டை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் விஜய்யும், விஜய்யின் ரசிகர்களும்.
வசூல் மழை: படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் பெரும் ரெஸ்பான்ஸை அள்ளியிருக்கிறது. முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாயை லியோ வசூலித்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது ஜெயிலர் படத்தின் முதல் வார வசூலைவிட அதிகம் என கூறப்படுவதால் ரஜினியை விஜய் முந்திவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறிவருகிறார்கள்.
எல்லாம் ஃபேக்?: மேலும் கண்டிப்பாக லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடித்துவிடும் என்று கூறிவருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ லியோ படக்குழு ஃபேக்காக ஒரு கலெக்ஷன் ரிப்போர்ட்டை சொல்கிறது. முதல் வார வசூலில் ஜெயிலரை லியோ முந்தவில்லை அதுமட்டுமின்றி 1000 கோடி ரூபாய் வசூலுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏனெனில் படத்துக்கு காமன் ஆடியன்ஸிடம் வரவேற்பே இல்லை என பதிலடி தருகின்றனர்.
அஜித் ரியாக்ஷன்: இப்படி லியோ மற்றும் ஜெயிலர் வசூலை வைத்து தொடர்ந்து ரசிகர்கள் சண்டை செய்யும் சூழலில் இதையெல்லாம் பார்த்து அஜித்தின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்த லியோ, ஜெயிலர் வசூல் குறித்து பேசப்படுவதை அஜித் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்.
ஆனால் அதையெல்லாம் தன்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ளவே மாட்டார். அவரை பொறுத்தவரை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாகவே இருப்பார். அதேசமயம் அய்யயோ இந்த சண்டை நடக்குதா அந்தப் படம் அவ்வளவு கலெக்ஷன் ஆகிருக்கா என்றெல்லாம் கவலைப்படமாட்டார்" என்றார்.

விடாமுயற்சி: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தற்போது அஜர்பைஜானில் ஷூட்டிங் நடந்துவருவதாகவும் அதில் த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











