ராயன் படம் தேறுமா?.. தனுஷ் பற்றி நீங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மை தான்.. அந்தணன் ஓபன் டாக்!

சென்னை: ராயன் திரைப்படம் வெளியான பிறகு தனுசை இன்னொரு வெற்றி மகனாக தமிழ் சினிமா பார்க்கும் என அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் ராயன் திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இந்த மாதம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 26 ஆம் தேதி அந்த படம் வெளியாகிறது.

ராயன் படத்தில் செல்வ ராகவன், பிரகாஷ் ராஜ், எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Raayan Dhanush Anthanan Suchitra

தனுஷ் தொடர்பான ஏகப்பட்ட சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் சுசித்ராவின் பேட்டிக்கு பிறகு தீயாக பரவிய நிலையில், அது தொடர்பாக பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த வெற்றிமாறன்: பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிமாறன் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். அந்த படத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கியது. தொடர்ந்து வெற்றிமாறனுடன் பயணம் செய்து வந்த நடிகர் தனுஷுக்கு இயக்கத்தின் மீது தீராக் காதல் ஏற்பட்டது. அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன், முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது தங்கை செளந்தர்யா ரஜினிகாந்த் என அனைவருமே இயக்குநர்கள் என்பதால் தானும் இயக்குநராக வேண்டும் என நினைத்த தனுஷ் ப. பாண்டி படத்தை இயக்கினார். ராயன் படத்தில் அவர் அடுத்த வெற்றி மாறனாகவே மாறியுள்ளார் என அந்தணன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Raayan Dhanush Anthanan Suchitra

கிசுகிசுக்கள் உண்மைதான்: தனுஷ் பற்றி சமூக வலைத்தளங்களில் கிளம்பிய அனைத்து கிசுகிசுக்களும் உண்மைதான். ஆனால், அதெல்லாம் அவர் இப்போது செய்தது அல்ல, ஆரம்ப காலகட்டத்தில் அவர் பண்ணது. அதன் பிறகு, அவருக்கு வெற்றி மீதான வேட்கை எழுந்த நிலையில், இங்கே சாதிக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்க வேண்டும் என நினைத்து தான் தொடர்ந்து அதற்காக ஓடி வருகிறார். இப்பவும் எதற்கெடுத்தாலும் தனுஷ் தான் காரணம் என பேசுவது எல்லாம் சரி கிடையாது என்றார்.

ராயன் தேறுமா?: சன் பிக்சர்ஸ் ஆரம்பத்தில் ராயன் படம் 'ஏ' சான்றிதழ் படமாக வரும் என்பதை அறிந்து பல வித கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அதெல்லாம் பரவாயில்லை படம் தாறுமாறாக உள்ளது. நிச்சயம் பந்தயம் அடிக்கும் என நினைத்து தனுஷுக்கு முழு சுதந்திரத்தை கலாநிதி மாறன் கொடுத்ததன் விளைவு படம் சிறப்பாக வந்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் பலரும் பேசிக் கொள்கின்றனர். நிச்சயம் ராயன் திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய படமாக அமையும் என அந்தணன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X