எந்திரன் கதை திருட்டு.. ஷங்கரின் 10 கோடி சொத்து முடக்கம்.. உண்மையில் நடந்தது என்ன?

சென்னை: இயக்குநர் ஷங்கரின்.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. என்னுடைய கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், எந்திரன் படத்தை எடுத்ததாக, அவர் மீது ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை வலைப்பேச்சு அந்தணன் விளக்கி வீடியோவில் பேசி உள்ளார்

அதில், ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, கவிஞர் ஆரூர் தமிழ்நாடான் 2007 ஆம் ஆண்டு ஒரு கதையை எழுதுகிறார். முதலில் சிறுகதையாக எழுதப்பட்டு பின், அது நாவலாக டிக் டிக் தீபிகா என்ற பெயரில் வெளியானது. அந்தக் கதை கிட்டத்தட்ட எந்திரன் கதையோடு ஒன்றிப்போன கதையாக இருந்தது. இதனால், ஆரூன் தமிழ்நாடான் என்னுடைய கதையை இயக்குனர் திருடி எந்திரன் என்ற பெயரில் படமாக வெளியிட்டு இருப்பதாக, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Shankar Enthiran

ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்: இதுதொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் போடப்பட்டு, பின் உயர்நீதமன்றம், உச்சநீதிமன்றம் வரை விசாரணைக்கு சென்றது. அப்போது சங்கர் காப்புரிமையை மீறவில்லை என்ற ஒரு தீர்ப்பு வந்ததால், சங்கர் மகிழ்ச்சியாக இருந்தார். அதோடு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்தால், இதில் காப்புரிமை மீறப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் தான் தற்போது அமலாக்கத்துறை ஷங்கரின் 10 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளது.

அது தான் பிரச்சனை: சங்கரை பொருத்தவரை எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அப்படியே அமைதியாக விட்டு விட்டால் தானே சரியாகவிடும் என்று நினைக்கக்கூடியவர் என்பதால், இந்த விஷயத்திலும் நிதானமாக இருக்கலாம் என்று அமைதியாக விட்டுவிட்டார். அதுதான் தற்போது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆரூன் தமிழ்நாடான், நக்கீரன் பத்திரிக்கையில் முதன்மை துணை ஆசிரியராக ஒரு பொறுப்புள்ள பணியில் உள்ளார். அவர் இந்த கதை திருட்டு விவகாரத்தில், எப்படி அமைதியாக இருப்பார் என சங்கர் நினைத்தார் என்று தான் தெரியவில்லை. அதுதான் தற்போது பிரச்சனையாகவே உள்ளது அதே போல ஷங்கர் அனைத்து கதைகளையும் இப்படித்தான் திருடி எடுத்தாரா என்ற மனநிலைக்கு வந்துவிடக்கூடாது.

எல்லாமே திருட்டு கதையா: இந்த எந்திரன் கதை விவகாரத்திலும் இரண்டு பேருக்கும் ஒரே கருத்து தோன்றாத என்ற நிலையில் தான் வகையில் தான் வழக்கு சென்றது. பின் மேல்முறையீடு செல்ல, இரண்டு கதைகளின் ஸ்கிரிப்டையும் வைத்து பார்த்து பல இடத்தில் கதையில் ஒற்றுமை இருப்பது தெரியவந்ததை அடுத்துத்தான் தற்போது ஷங்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை எடுத்த முடிவு சரியானதில்லை என இயக்குநர் ஷங்கர் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு எங்கு செல்லும் என்பது தெரியவில்லை.

வழக்கமாக அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்களின் சொத்துக்களை தான் முடக்கும், ஆனால், முதல்முறையாக சினிமா பிரபலத்தின் ஒருவரின் சொத்துக்களை முடக்கி உள்ளதால் அனைவரின் பார்வையும் சினிமா துறையின் பக்கம் திரும்பி இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X