அவுட்டேட்டட் ஆன இயக்குநர்களால் அழியும் சினிமா.. 50 பிளஸ் ஆனா தூக்கி போகியில போடணுமா?.. அந்தணன் பகீர்!
சென்னை: தமிழ் சினிமாவையே சில அவுட்டேட்டட் இயக்குநர்கள் தான் அழித்து வருகிறார்கள் என சோஷியல் மீடியாவில் பலரும் கடும் கோபத்தில் கொந்தளித்து வருவதாக அந்தணன் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். தக் லைஃப் படம் கமல்ஹாசனுக்கு லக் லைஃப் என்று பாசிட்டிவாகவே விமர்சித்திருந்த அந்தணன், நம்மைத் தவிர பலரும் தக் லைஃப் படத்தையும் மணிரத்னத்தையும் போட்டு பொளந்து வருகிறார்களே என இப்படியொரு வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார் என்று தான் தோன்றுகிறது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த கே.எஸ். ரவிக்குமார் லிங்கா படத்துக்குப் பிறகு அப்படியே அவுட்டேட் இயக்குநர் வரிசைக்கு சென்று படங்களை இயக்கும் வாய்ப்பை மொத்தமாக இழந்து நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சிங்கம் 3 படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹரியும் அவுட்டேட்டட் இயக்குநர் வரிசையில் சிக்கினார். அண்ணாத்த மற்றும் கங்குவா படங்களுக்குப் பிறகு சிறுத்தை சிவாவுக்கு எதிரான பேச்சுக்கள் அதிகம் கிளம்பவே அவரும் காணாமல் போய் விட்டார்.
இந்தியன் 2 எடுத்த ஷங்கர்: எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் கலவையான விமர்சனங்களும், படு மோசமான விமர்சனங்களுமே குவிந்தன. ஐ, 2.0 படங்களை தொடர்ந்து இந்தியன் 2 படம் அவருக்கு மிகப்பெரிய அவப்பெயரை பெற்றுத் தந்தது. மேலும், ராம்சரணை வைத்து இயக்கிய கேம் சேஞ்சர் படமும் ஷங்கரை மொத்தமாக அவுட்டேட் இயக்குநர் வரிசையில் கொண்டு வந்து சேர்த்து விட்டது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக இருந்த ஷங்கரால் இந்தியன் 3 படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் நிலவி வருவது தான் காலக்கொடுமையாக மாறியுள்ளது. ஷங்கர் இந்தியன் 2 படத்தை ஆரம்பிக்கும் போது இருந்த சூழல் வேறு, 5 ஆண்டுகால தாமதமாக வெளியான போது இருந்த சூழல் வேறு என்பதால் தான் அந்த படம் சிக்கியது என்றும் கூறியுள்ளார்.
மணிரத்னம் மொத்தமா ஏமாத்திட்டார்: இயக்குநர் மணிரத்னம் ரொம்ப காலத்துக்கு முன்பே சொதப்பலான படங்களை கொடுக்க ஆரம்பித்தாலும், பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை எழுந்தது. ஆனால், அதன் 2ம் பாகத்தையே சொதப்பி வைத்து விட்டார் என ட்ரோல் செய்யப்பட்டாலும் கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் என டிரெண்டியான டைட்டில் எல்லாம் வைத்திருக்கிறார். புதுவிதமான காட் ஃபாதர் உலகத்தை படைத்துக் காட்டுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மொத்தமாக அவர் ஏமாற்றிவிட்டார் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.

அவுட்டேட்டட் ஆகிட்டாங்க: அந்த காலத்தில் ஃபிலிமில் படம் எடுத்துக் கொண்டிருந்த போது அத்தனை புது முயற்சிகளை செய்து வியக்க வைத்த ஆளுமைகளை எல்லாம் தற்போது உள்ள 2கே கிட்ஸ்கள் ட்ரோல் செய்வதை பார்க்கவே மனசுக்கு கஷ்டமாக உள்ளது என அந்தணன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவுட்டேட்டட் ஆகிட்டாங்க என அவர்கள் சொல்வதையும் மறுக்கவும் முடியவில்லை என பேசியுள்ளார்.
போகியில் போடுங்க: சாமி படத்தில் வரும் விவேக் காமெடியில், பழசை எல்லாம் போகியில் போடுங்க என சொல்லும் போது, ஒரு வயதானவரை தூக்கிக் கொண்டுப்போய் போகியில் போடுகிறேன் என விவேக் அடம்பிடிப்பார். அந்த மீமை எல்லாம் போட்டு, ஷங்கர் மற்றும் மணிரத்னத்தை ட்ரோல் செய்வது எல்லாம் ரொம்பவே வருத்தமடைய செய்கிறது. 50 பிளஸ் வயதுக்கு மேல் சென்று விட்டால் இயக்குநர்கள் பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளர்களின் பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு நல்ல நல்ல புதுமையான கதைகளை சிறு பட்ஜெட்டில் செய்து ரசிகர்களை கவரலாம் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











