இளையராஜா காப்பி ரைட்ஸ் சிக்கல்..உதவி செய்ய மாட்டாரு.. அந்தணன் பேட்டி!

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். உரிமையை வாங்கிய பிறகுதான் படத்தில் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜாவின் நோட்டீஸ்களுக்கு தயாரிப்பாளர் பதில் அளித்த நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், 2014க்கு முன்னாடி வந்த படங்கள், இளையராஜா பீக்கில் இருந்த காலகட்டத்தில் ஓடிடி, ரைட்டிஸ் இதை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இதனால், தற்போது அந்த பாடலை பயன்படுத்தும் போது, இளையராஜா சண்டை போடுகிறார். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. பல ஆடியோ கம்பெனிகள் அவரின் பாடலுக்கு ரைட்ஸ் வாங்கி உள்ளது. அந்த ஆடியோ கம்பேனிகளிடம் இருந்து ரைட்சை வாங்கி படத்தில் பயன்படுத்தும் போது, இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பினால் செல்லுமா என்கிற ஒரு கேள்வி இருக்கிறது.

Anthanan talks about Ilayaraja sending a notice to Manjummel Boys film crew

இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு: ஆனால் இளையராஜா தரப்பு, ஆடியோ கம்பெனிக்கோ, தயாரிப்பாளருக்கோ உரிமை இல்லை. இந்த பாடலை ஒரு படத்தில் பயன்படுத்தலாம் என்கிற ரைட்டிஸ், இளையராஜாவிற்கு மட்டும் தான் இருக்கிறது என்று இளையராஜா தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. தீர்ப்பு வந்த பிறகுதான், இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும். அதுவரைக்கும் இளையராஜா பாடலை யார் பயன்படுத்தினாலும், நோட்டீசை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு இளையராஜா கொண்டுவந்துவிட்டுவிட்டார்.

நம்பர் தரலாம்: மேலும், இளையராஜாவின் பாடலுக்கு ரைட்சை பெறவேண்டும் என்றால், அதற்கு இளையராஜாவை சந்திக்க வேண்டும். ஆனால், அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாது. இதனால், பாடலுக்கு ரைட்ஸ் வாங்க இந்த நம்பரை அணுகவும், அந்த நபரை அணுகவும் என்று போட்டுவிட்டால், எந்த பிரச்சனையும் இருக்காது.

உதவி செய்ய மாட்டார்: அண்மையில் இளையராஜாவின் உறவினர் ஒருவரிடம் பேசினேன், இவர் ஒரு தகவலை சொன்னார். அதாவது, இளையராஜாவின் மூத்த அண்ணன் பாவலர், அவரின் மகன் ஜோ, அந்த காலகட்டத்தில் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து இருக்கிறார். அவர் இளையராஜாவிடம் தயாரிப்பாளர் ஒருவரிடம் சிபாரிசு செய்யுங்கள் என்று சொன்னார். அதற்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அப்படித்தான் இளையராஜா தனது சொந்த குடும்பத்தையே வைத்து இருக்கிறார் என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X