கீர்த்தி சுரேஷ் முக்கியமா? அரசியல் தலைவரான பிறகும் விஜய் செய்வது சரியில்லை..விளாசிய பிரபலம்!
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மேலாளர் ஜெகதீஷின் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி உடன் கலந்து கொண்டார். மேலும், நடிகர் விஜய்,கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ, கதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நேரில் சென்று பார்க்கவில்லை, கட்சிகள் நிர்வாகிகள் இடையே பிரச்சனை இருக்கும் நிலையில், விஜய், கீர்த்தி சுரேஷூடன் பொங்கல் கொண்டாடுவது முக்கியமா என இணையத்தில் கேள்வி எழுந்து வருகிறது.
இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், விஜய்யின் இந்த செயலுக்கு மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அனைவரும் குடும்பத்தோடுதான் பொங்கல் கொண்டாடுவார்கள். யாரும் மற்றவர்களின் வீட்டிற்கு சென்று பொங்கல் கொண்டாட மாட்டார்கள். இதற்கு மக்கள் கேட்கும், கேள்விக்கு விஜய் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால், இதற்கு அவர் பதில் அளிக்க மாட்டார். இருந்தாலும் இந்த கேள்வி இணையத்தின் வாயிலாக கேட்கப்படுகிறது என்பதாவது விஜய்க்கு தெரிய வேண்டும்.

கீர்த்தி சுரேஷ் முக்கியமா: விஜய் மிகப் பெரிய அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார். அண்மையில் கூட மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்படி மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இந்த பொங்கலை கொண்டாடியிருந்தார் என்றால் மிகப்பெரிய அளவில் அவர் பேசப்பட்டு இருப்பார். விஜய் அரசியல் தலைவராக மாறிய பிறகு வரும் முதல் பொங்கல் இது என்பதால், விஜய் தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடி இருக்க வேண்டுமே, தவிர கீர்த்தி சுரேஷூடன் தல பொங்கலை கொண்டாடியிருக்கக் கூடாது.
விஜய்க்கு தான் கஷ்டம்: நடிகராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் சரி, அதற்கு இமேஜ் என்பது முக்கியமான ஒன்றாகும். இன்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இந்த கேள்வி நாளை பல்லாயிரம் கேள்விகளாக மாறலாம். பின்னாளில் இதுவே விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும். விஜய்க்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா இல்லை தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அவருக்கு அறிவுரை கூறுபவர்கள் இதற்கு செல்ல வேண்டாம் என்று அவரை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு சென்றது, அவர் நெருங்கிய தோழி என்பதற்காக என்று ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தல பொங்கலுக்கு செல்வது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











