சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்த நிம்மதியான விஷயம்.. யப்பா ஒருவழியா முடிச்சிட்டாராம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அந்தப் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு 50 கோடி ரூபாய்வரை தனது சம்பளத்தை அவர் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்ததாக அவர் புறநானூறு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்தில்தான் அந்தப் படத்துக்கான பூஜை நடந்தது. இந்தப் படம் தவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் அவர்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆனவர் சிவகார்த்திகேயன். அதற்கு பிறகு தனுஷ் நடித்த 3 படத்தில் சிறிய ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரீனா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து நடித்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்கு; கமர்ஷியல் பாதையை அவருக்கு திறந்து வைத்தது.

நூறு கோடி ரூபாய்: அதனையடுத்து பல படங்களில் நடித்த அவருக்கு டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் ரெஸ்பான்ஸை பெற்ற அந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்தது. அடுத்ததாக அவர் நடித்த டான் திரைப்படமும் மெகா ஹிட்டானது. அந்தப் படமும் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டியது. தொடர்ந்து இப்படி இரண்டு படங்கள் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்ததன் காரணமாக முன்னணி ஹீரோ என்ற இடத்துக்கு நகர்ந்தார் அவர்.
அமரன் மெகா ஹிட்: சூழல் இப்படி இருக்க அவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்தது. ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். படமானது மெகா ஹிட்டாகியிருக்கிறது. விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. மொத்தம் 350 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
அடுத்த படங்கள்: இதற்கிடையே பட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கும் அவர் கடைசியாக கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரும், சுதாவும் இணையும் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்புதான் நடந்தது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாலர் அந்தணன் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "சிவகார்த்திகேயனுக்கு விநியோகஸ்தர்களிடம் பெருந்தொகை கடனாக இருந்தது. அதனை பல்வேறு கட்டங்களாக கட்டி முடித்தார். இறுதியில் கொட்டுக்காளி படத்துக்கு முன்பு ஐந்து கோடி ரூபாய்க்காக கையெழுத்து போட்டுக்கொடுத்தார். சிவகார்த்திகேயன் அந்த கையெழுத்தை போட்ட பிறகுதான் கொட்டுக்காளி படமே ரிலீஸ் ஆனது. இப்போது அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் நிலைமையே வேறு இடத்துக்கு சென்றுவிட்டது. அதன் காரணமாக கடந்த வாரம் அந்த ஐந்து கோடி ரூபாய் கடனை கட்டி முடித்தார்"" என்றார்.


Click it and Unblock the Notifications











