பாலா போல அஜித்தும் முரடன் தான்.. அவர் சொன்னதெல்லாம் பொய்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக பாலா, அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாலா அஜித் குறித்தும், சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியது பற்றியும் பேசி உள்ளார். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் அளித்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், பாலாவிற்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இமேஜ் இருக்கிறது. அப்படி ஒரு இமேஜை பாலா அவர்கள் உருவாக்கி வைத்து இருக்கிறார். அதனால் அஜித் பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்காமல் போய்விட்டது. ஆனால், அஜித்தை பாலா அடித்தார் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய். அப்படி எதுவும் நடக்கவே இல்லை அஜித்தை எல்லாம் அடிக்கவே முடியாது, பாலாவை போல அஜித்தும் ஒரு முரட்டுத்தனமான நபர் தான், இன்றைய சூழ்நிலையில் வேண்டுமானால் அஜித்தின் குணம் மாறி இருக்கலாம், ஆனால் அந்த காலகட்டத்தில் அஜித்தும் ஒரு முரட்டுத்தனமான நடிகராக தான் இருந்தார்.

vanangaan bala anthanan

அஜித்திடம் சொல்லவில்லை: பாலா அளித்த பேட்டியை கட் செய்து அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த பேட்டியில், சேது இந்தி ரீமேக்கின் போது, நடிகர் ஒருவர் தாமதமாக வந்ததால், அவருக்காக எல்லாம் காத்திருக்க முடியாது என்று, பேக்கப் செய்துவிட்டு கிளம்பி விட்டதாக பாலா தெளிவாக கூறியிருக்கிறார். அது அஜித் என்பது போல சோசியல் மீடியாவில் ஒரு சிலர் தகவலை பரப்பி வருகிறார்கள். ஆனால் பாலா சொன்ன ஹீரோவே வேறு, அவர் அஜித்தை பற்றி, எதுவுமே சொல்லவில்லை.

அஜித் குறித்த கேள்விக்கு கூட பாலா பதிலளிக்காமல் தவிர்த்து விட்டார். ஏனென்றால் தற்போது, அஜித் ஒரு உச்ச நடிகராக இருக்கிறார். வணங்கான் திரைப்படம் வெளியாக இருக்கும் இந்த சூழ்நிலையில், அஜித் குறித்து பேசி, அவரின் ரசிகர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று பாலா நினைக்கிறார்.

பொய் சொல்லி இருக்கிறார்: பாலாவை பற்றி நமக்கு ஒரு பிம்பம் இருக்கும், அதாவது பாலா தைரியமானவர், மனதில் நினைத்ததை பேசுவார் என்று, ஆனால் பாலா அளித்த பேட்டியில் பல விஷயங்களை, பொய்யாக கூறியிருக்கிறார். அதை நினைக்கும் போது தான், ஆச்சரியமாக இருக்கிறது. அவரை இந்த சினிமா பொய் பேசும் அளவிற்கு ஆக்கிவிட்டதே என்று தான் எனக்கு தோன்றுகிறது.

அதாவது, வணங்கான் படத்தில் சூர்யா வெளியேறியது குறித்த கேள்விக்கு, இருவரும் பேசித்தான் முடிவு எடுத்தோம். கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியவில்லை கூட்டம் கூடி விடுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடிவியல்லை, இதனால், படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியிருந்தார். இதைக்கேட்டால், சின்ன குழந்தை கூட சிரித்துவிடும். இந்த கூட்டத்தைக்கூட கட்டுப்படுத்த முடிவில்லை என்றால் அவர் ஒரு இயக்குநரா, அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உண்மையான காரணத்தை அவர் வெளியில் சொல்ல முடியாது என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X