சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜை கவிழ்த்த கருங்காலி... வலைப்பேச்சு அந்தணன் சொல்வது என்ன!

சென்னை: சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கருங்காலியால் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கருங்காலி மாலை என்கிற பெயர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அடிபடுகிறது. அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

Anthanan told about the problems caused by Sivakarthikeyan and Lokesh Kanagaraj due to karungali

ஒருபக்கம் கருங்காலி மாலையின் சக்தி இதுதான் என பலரும் சோஷியல் மீடியாவில் பேசி தொடங்கி உள்ளனர்.

காலி செய்த கருங்காலி: சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கருங்காலி மாலைகளை அணிய துவங்கியதுதான் இதற்கு முக்கிய காரணம். கோடம்பாக்கம், சாலிகிராமம் பக்கம் போனால் சினிமா துறையில் இருக்கும் பலரும் இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.

வலைப்பேச்சு அந்தணன்: சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை அணிந்தது குறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேட்டி அளித்த போது அதில் கருங்காலி மாலை அணிந்திருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, இந்த மாலை போட்டால் நல்லது என்று சொன்னார்கள் என்பதால் போட்டு இருக்கிறேன் என்றார். இதனால், பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலை அணியத் தொடங்கினார்கள்.

கழட்டி விட்டார்: ஆனால், உண்மையில் கருங்காலி மாலையால் சிவகார்த்திகேயனுக்கு நல்லது நடக்கவில்லை, அது அணியாத வரை அவரின் படங்களுக்கு நல்ல பெயரும் இருந்தது. ஆனால், தற்போது இமான் விவகாரத்தில் அவருடைய பெயர் அடிபட்டு, அவருக்கு பெண்கள் இடத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியாக இருக்கும் அயலான் படம் ஓடுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகார்த்திகேயன் தற்போது கருங்காலி மாலையை கழட்டி உள்ளார்.

இரண்டு பேருக்கும் பிரச்சனை: அதே போல,லோகேஷ் கனகராஜுக்கு லியோ படம் வருவதற்கு முன்பு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து இருந்தது. ஆனால், லியோ படத்திற்கு பின் படம் ஒரு குப்பை என பல மோசமான விமர்சனங்கள் லோகேஷ் கனகராஜ் மீது எழந்தது. தற்போது அவர் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை அவர் நிம்மதியாக எடுப்பாரா என்று தெரியவில்லை என்றார். மேலும் கருங்காலி மாலை கருங்காலித் தனமான வேலையை செய்துவிட்டது என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X