ரெட் கார்டு பின்னணியில் ரஜினியா? கடும் நெருக்கடியில் தனுஷ்.. அந்தணன் சொல்வது என்ன?
சென்னை: நடிகர் தனுஷ் நிறைய பேரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு கால் சீட் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததை அடுத்து, தனுஷ் புதிய படங்களைத் தொடங்கும் முன் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. தனுஷ் சந்தித்து இருக்கும் இந்த பிரச்சனைக்கு ரஜினி தான் காரணம் என்று பரவும் செய்து குறித்து அந்தணன் விளக்கம் அளித்துள்ளார்
அந்த வீடியோவில், தனுஷூக்கும் விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியான ஒரு உத்தரவை போட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் அதிர்வலைலையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு என் காரணம், ஆந்திராவில் விஷால், தனுஷூக்கு தனி ரசிகர்கள் இருப்பதால், அந்த ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிக சம்பளம்: அதுமட்டுமில்லாமல், வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நடிகர்களை புக் செய்யும் தயாரிப்பாளர்களும் இதனால், அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு காரணம் இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் நாம் வளர்ந்துவிட்ட நடிகர்கள் நமது படத்திற்கு கால்ஷூட் தராமல், அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக வெளிமாநில தயாரிப்பாளர்களுக்கு கால்ஷூட் கொடுப்பதால், கோலிவுட் தயாரிப்பாளர் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள். இதனுடைய வெளிப்பாடு தான் தனுஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு.
ரஜினி காரணமா: தயாரிப்பாளர் சங்கம் எடுத்த இந்த நடவடிக்கைக்கு பின்னால் ரஜினி இருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. ஆனால், என்னை பொருத்தவரையில் ரஜினி இதுபோன்று குறுக்கு வழியில் காரியம் சாதிக்கும் நபர் இல்லை. ஏன் என்றால், தனுஷ், ஐஸ்வர்யா பிரிய முடிவு எடுத்த போது, இருவரையும் அழைத்து பேசினார். ஆனால், அது சரிப்பட்டு வராததால், அதன்பின் விவாகரத்து பிரச்சனையில் இருந்து அவர் ஒதுக்கி விட்டு தன் வேலைகளை பார்த்து வருகிறார்.
இறங்கி வேலை செய்தாரா ரஜினி: மகள் தனுசை விட்டு பிரிந்த பிறகும், தனுசை ஒழித்து விடுவேன், தனுஷ் வளரக்கூடாது என்று இறங்கி வேலை செய்தது இல்லை. தனுஷின் வெற்றியையும் தோல்வியையும் அவர் சமமாகத்தான் பார்க்கிறார். தனுஷூக்கு ரெட் கார்டு கொடுக்க, தயாரிப்பாளருக்கு ரஜினி தரப்பில் இருந்து எதாவது அழுத்தம் வந்ததா என்று விசாரித்த போது, அது போல எந்தவிதமான அழுத்தமும் வரவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சிம்புவின் புத்திசாலித்தனம்: இது போன்ற பிரச்சனையில் சிக்கியவர் தான் நடிகர் சிம்பு, இவர் மீது தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக பல முடிவுகளை எடுக்க, அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக யோசித்த சிம்பு, தானாக முன்வந்து கலந்து பேசி அந்த பிரச்சனையில் இருந்து மீட்டுவிட்டார். ஆனால், தனுஷூக்கு அந்த ஒரு புத்திசாலித்தனம் கூட இல்லை. இந்த விவகாரத்தில் அவர் எந்தவிதமான பதில் அளிக்காமல் இருக்கிறார். ஒரு நடிகர் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி அட்வான்சை வாங்கி விட்டார் என்றால், ஒப்பந்தம் ஆன நாளில் என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அந்த சம்பளத்தில் தான் நடிக்க வேண்டும்.
தனுஷ் படத்திற்கு தடை வருமா? ஆனால், தனுஷ் போன்ற நடிகர்கள், அட்வான்சை வாங்கிவிட்டு அந்த படத்திற்கு கால்ஷூட் தராமல் இழுத்து அடித்துவிட்டு, இரண்டு வெற்றிப்படத்தை கொடுத்து விட்டு சம்பளத்தை அதிரடியாக ஏற்றுவதுதான் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கிறது. தனுஷ் தற்போது சேகர் கமுலா இயக்கத்தில் குபேரன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்கே தமிழ்நாட்டில் தடைவிதிக்க வேண்டும் என்கிற அளவிற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











