twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் அதிகரிக்கும் ஆந்தாலஜி திரைப்படங்கள்.. ஒரு பார்வை!

    |

    சென்னை: தமிழ் சினிமாவை தற்போது இளம் இயக்குனர்களின் படை முன்னோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறது.

    வித்தியாசமான கதைகளங்களை கொண்டு படங்கள் வெளிவந்து கொண்டிருக்க குறிப்பாக anthology திரைப்படங்கள் வரவேற்பை பெற்றுவருகிறது.

    சமீபத்தில் 3 anthology திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்னும் 2 படங்கள் வெளிவரவுள்ளன.

    மனதை வருடியது

    மனதை வருடியது

    பெண் இயக்குனர்கள் மத்தியில் தனித்துவமான படைப்புகளை கொடுத்து வருகிறார் ஹலீதா ஷமீம்.
    ஹலீதா ஷமீமின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான anthology படமான சில்லுக் கருப்பட்டி ரசிகர்கள் மனதை வருடும் வகையில் அழகான படைப்பாக அமைந்தது.

    லாக் டவுன் கதை

    லாக் டவுன் கதை

    சுதா கொங்காரா, கவுதம் மேனன், ராஜிவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுபராஜ் என முன்னணி இயக்குனர்களின் கூட்டணியில் லாக்டவுனை மையமாக வைத்து 5 கதைகளாக வெளியான anthology படமான புத்தம் புது காலை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஆணவ கொலைகள்

    ஆணவ கொலைகள்

    ஆணவ கொலைகளை மையமாக வைத்து வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன் என பெரிய இயக்குனர்கள் இயக்கிய anthology படமான பாவ கதைகள் பெரிய அளவில் வெற்றி பெற்று சினிமா வட்டாரங்களில் பாராட்டுகளை அள்ளியது.

    காதல் கதைக்களம்

    காதல் கதைக்களம்

    இதை தொடர்ந்து தமிழில் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு குட்டி லவ் ஸ்டோரி anthology படமும், Hembar Jasti இயக்கத்தில் c/o Kancharapalem படத்தின் தமிழ் ரீமேக்கான c/o காதல் எனும் anthology படமும் வெளிவரவுள்ளது.

    English summary
    Anthology film special report
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X