லண்டனில் ராஜா மாதிரி வாழுறாரே அந்தோணி தாசன்.. காருக்கு பக்கத்துல செம போஸ்.. சொடக்கு மேல சொடக்குதான்!

சென்னை: கிராமிய பாடகரான அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் "ஓஜி சம்பவம்" இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக லண்டன் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ளார்.

கருணாஸ் ஹீரோவாக நடித்து வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ் மனைவி கிரேஸ் உடன் இணைந்து "திண்டுக்கல்லு திண்டுக்கல்லு" பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானவர் தான் அந்தோணி தாசன்.

Anthony Dasan shares a luxurious pictures of him during london trip
Photo Credit:

சூர்யாவுக்காக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் பாடிய "சொடக்கு மேல சொடக்கு" பாடல் அவரை வேறலெவலில் பிரபலமாக்கியது. இசையமைப்பாளராக மாறிய அந்தோணி தாசன் புதிய படம் ஒன்றையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட ஹிட் பாடல்கள்: அந்தோணி தாசன் அறிமுகமான பாடலே மிகப்பெரிய ஹிட் பாடலாக மாறியது. அடுத்து சூது கவ்வும் படத்தில் கானா பாலாவுடன் இணைந்து "காசு பணம் துட்டு மணி மணி" பாடலையும் இவர் பாடி டிரெண்டானார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, ரோமியோ ஜூலியட், ஆம்பள, திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அரண்மனை 2, உறியடி, பவர் பாண்டி, மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம், பரியேறும் பெருமாள், யானை, வாத்தி, கருடன் மற்றும் விடாமுயற்சி என பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

லண்டனில் ராஜா போல: தஞ்சாவூரின் ரெட்டி பாளையத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக மாறிய அந்தோணி தாசன், ஜி.வி. பிரகாஷின் ஓஜி சம்பவம் இசை கச்சேரிக்காக லண்டனி சென்ற நிலையில், அங்கே ராஜா போல கார் ஒன்றின் அருகே செம மாஸாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது நடை, உடை, பாவனை எல்லாமே வேறலெவலில் மாறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 48 வயதாகும் அந்தோணி தாசன் அவியல், உறியடி, எம்ஜிஆர் மகன் மற்றும் குயிக்கோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அடுத்ததாக ஒரு புதிய படத்தையும் அவர் இயக்குநராக செதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கை நிறைய காசு, துட்டு, மணி மணி தான்: அந்தோணி தாசன் ஒரு பாடல் பாட பல லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இசைக்கச்சேரிகளுக்கு செல்வது, வெளிநாடுகளில் இசை விழாக்களை நடத்துவது என ஏகபோகமாக சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X