சித் ஸ்ரீராமை தொடர்ந்து அந்தோனி தாசனும் இசையமைப்பாளராகிறார்!

சென்னை: சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரலு வந்து என தனது குரலில் சொடக்கு போட்டு தமிழ் சினிமா ரசிகர்களை ஆட வைத்த பாடகர் அந்தோனி தாசன், தனது விரலால் சொடக்கு போட்டு இசையமைக்கவுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து மூன்று படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம், அடுத்ததாக சசிகுமாரை வைத்து எம்.ஜி.ஆர். மகன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தான் அந்தோனி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

கிராமிய இசை

கிராமிய இசை

தஞ்சாவூரில் உள்ள ரெட்டிபாளையத்தில் பிறந்தவர் அந்தோனி தாசன். அவரது தந்தை ஒரு நாதஸ்வர கலைஞர். ஊர் திருவிழாக்களில் கச்சேரி நடத்தி வந்த அந்தோனி தாசன், 2007ம் ஆண்டு தீனா இசையில் வெளியான திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சொடக்கு போட்ட ஹிட்

சொடக்கு போட்ட ஹிட்

காசு, பணம், துட்டு மணி பாடலை கானா பாலாவுடன் இணைந்து பாடிய அந்தோனி தாசன், பல சினிமா பாடலை தொடர்ந்து பாடி வந்தாலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அனிருத் இசையில் வெளியான சொடக்கு மேல சொடக்கு பாடலை சோலோவாக பாடி, சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர், ரஜினியின் பேட்ட படத்தில் ஆஹா கல்யாணம் பாடலை பாடும் வாய்ப்பு அந்தோனி தாசனுக்கு கிடைத்தது.

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்

கிராமிய பாடல்களை பாடி வந்த அந்தோனி தாசன், தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர் வரிசையில் இடம்பெற்றுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வானம் கொட்டட்டும் படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் எம்.ஜி.ஆர். மகன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரமெடுக்கிறார் அந்தோனி தாசன்.

எம்.ஜி.ஆர். மகன்

எம்.ஜி.ஆர். மகன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முதல் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. ஆனால், கடைசியாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீமராஜா படம், எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால், அடுத்ததாக, சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர். மகன் என்ற டைட்டிலில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X