“ஆடுகளம்” வில்லன் கிஷோர் கதாநாயகன் அவதாரம் – காதலி காணவில்லை படத்தில் ஹீரோ

தமிழில் ஆடுகளம், பொல்லாதவன், ஜெயம் கொண்டான், ஹரிதாஸ் போன்ற படங்களில் நடித்தவர் கிஷோர். ஹரிதாஸில் கதாநாயகன் என்ற போதிலும் குழந்தைக்கு தந்தையாகத்தான் நடித்திருந்தார்.
இந்நிலையிதான் தற்போது "காதலி காணவில்லை" என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் கிஷோர். இப்படத்தில் கிஷோருக்கு ஜோடியாக கார்த்திகா ஷெட்டி நடிக்கின்றார்.
இப்படத்தில் ஜி.ஆர், பத்மா வசந்தி, சோப்ராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஜி.ஆர் கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.பி.பூரணி, சுவாமிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தினை இரட்டையர்களான ரவி-ராஜா எழுதி இயக்குகின்றனர். ஒளிப்பதிவு ஓஷா.
இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற மார்கெட் பகுதியில் கிஷோர், வில்லன்களுடன் மோதும் அதிபயங்கரமான சண்டைக் காட்சியை மிகப்பிரயத்தனப்பட்டு படமாக்கியுள்ளார்கள்.
இப்படத்தில் வில்லன் வேடத்தில் சோப்ராஜும் அவருடன் அடியாளாக வேலை செய்யும் வேடத்தில் கிஷோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்ததும் இவ்வாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











