பிரபல தாதா.. நடிகை பியூட்டி பார்லரில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை!

By

பெங்களூரு: நடிகையின் பியூட்டி பார்லரில் பிரபல தாதாவின் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பாக, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Recommended Video

Vanitha VijayKumar செய்யும் சூழ்ச்சி • கலங்கும் குடும்பம்

தமிழில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர், லீனா மரியா பால்.

கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பட்டப்பகலில் துப்பாக்கி

பட்டப்பகலில் துப்பாக்கி

இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் இங்கு சரமாரியாகச் சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பானது. சம்பவம் நடந்தபோது பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. பிரபல தாதா ரவிபுஜாரியின் ஆட்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

புழல் சிறையில்

புழல் சிறையில்

நடிகை லீனா மரியா பால், தனது காதலர் சுகாஷ் சந்திரசேகருடன் சேர்ந்து, சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம் 19 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாதா ரவிபுஜாரி

தாதா ரவிபுஜாரி

இந்நிலையில், செனகல் நாட்டில் அந்தோணி பெர்னாண்டஸ் என்ற பெயரில் மறைந்திருந்த தாதா ரவிபுஜாரியை போலீசார் கைது செய்தனர். கடந்த வருடம் அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். பெங்களூரில் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கொலை மிரட்டல், பணம் பறித்தது உட்பட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

பணம் பறிப்பதற்காக

பணம் பறிப்பதற்காக

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், சல்மான் கான், அக்‌ஷய்குமார், கரண் ஜோஹர் உட்பட பல பிரபலங்களை அவர் மிரட்டியுள்ளார். இந்நிலையில் நடிகை லீனா மரியா பால், பார்லரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, தனது ஆட்கள்தான் என்றும் பணம் பறிப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாகவும் ரவிபுஜாரி போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

குற்றப்பத்திரிகை

குற்றப்பத்திரிகை

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன், ரவி புஜாரியின் ஆட்கள் அவரிடம் ரூ.25 கோடி தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் மறுத்ததை அடுத்தே, இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கை இப்போது, எர்ணாகுளம் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி ரவிபுஜாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X