மாஸ்டர் படத்துல தவறிடுச்சு.... விக்ரம் படத்துல சேர்த்தே ஆகணும்... அடம்பிடிக்கும் லோகேஷ் கனகராஜ்
சென்னை : விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியும் வில்லன் கேரக்டரை ஏற்று நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் படத்தில் புதிய இணைப்பை சேர்க்க லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படம் இயக்கம்
விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து அவரது 232வது படமாக விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் லாக்டவுன் சூழல்கள் ஓரளவு சரியானவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி வில்லன்
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல நடிகர் விஜய் சேதுபதியை கமலுக்கு வில்லனாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படத்தில் ஆன்டனி வர்க்கீஸ்?
ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் எடுத்து முடிக்க கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் ஆன்டனி வர்க்கீரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கனகராஜ் தீவிரம்
மாஸ்டர் படத்திலேயே ஆன்டனி வர்க்கீசை இணைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது தேதிகள் ஒத்துவராததால் அவர் படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது அவரை விக்ரம் படத்தில் இணைக்க கனகராஜ் தீவிரமாக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











