குட்டி டவுசர் அணிந்து இம்சை கொடுக்கும் அனு இமானுவேல்!
சென்னை: சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல்.
பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான அல்லு ஷிரிஷ் உடன் காதலில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அல்லுடு ஆதுர்ஸ் மற்றும் மகா சமுத்திரம் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனு இமானுவேல் இப்பொழுது குட்டி டவுசரில் ஆளைக் கொல்லும் காந்தப் பார்வையில் இளசுகளுக்கு இம்சை கொடுத்துள்ளார்.

சில திரைப்படங்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக வலம் வரும் நடிகைகளின் பட்டியலில் இணைந்திருக்கும் அனு இமானுவேல் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் தெலுங்கில் இவரது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.

மிகப் பெரிய வெற்றி
நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தூள் கிளப்பும் அனு இமானுவேலுக்கு நம்ம வீட்டுப்பிள்ளை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த நிலையில் தமிழிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினர். தமிழில் தொடர்ந்து திரைப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றுவரை அப்டேட் எதையும் அளிக்கவில்லை.
Recommended Video

மகா சமுத்திரம்
இருப்பினும் தெலுங்கில் படு பிஸியாக நடித்து வரும் அனு இப்பொழுது அல்லுடு ஆதுர்ஸ் மற்றும் மகா சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மகா சமுத்திரம் திரைப்படத்தை ஆர் எக்ஸ் 100 பட இயக்குனர் அஜய் பூபதி இயக்க சர்வானந்த் மற்றும் சித்தார்த் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது.

குட்டி டவுசரில்
திரைத்துறையில் அறிமுகமாகி கொஞ்ச காலத்திலேயே காதல் கிசுகிசுக்களில் சிக்கி வரும் அனு இமானுவேல் அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகரும் தயாரிப்பாளருமான அல்லு ஷிரிஷ் உடன் காதலில் இருப்பதாக கடந்த சில காலமாக தெலுங்கு சினிமாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் வலை தளத்தையே வளைத்துப் போடும் அளவிற்கு குட்டி டவுசரில் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு கட்டி இழுக்கும் காந்த பார்வையால் இளசுகளை இம்சை செய்யும் இவரது போட்டோ செம வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











