2 ஹீரோ படம்.. அதிதி ராவ் ஹைதாரியை அடுத்து.. 'மகா சமுத்திரத்'தில் இணைந்த அனு இம்மானுவேல்!
சென்னை: தமிழ், தெலுங்கில் உருவாகும் மகா சமுத்திரம் படத்தில், பிரபல நடிகை அனு இம்மானுவேலும் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் ஜெயராம், சம்விருதா நடித்த ஸ்வப்னா சஞ்சாரி என்ற படம் சினிமாவில் அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.
சிகாகோவில் பிறந்தவரான அனு இம்மானுவேல், அடுத்து ஆக்ஷன் ஹீரோ ஃபைஜூ என்ற படத்தில் நடித்தார்.

சைலஜா ரெட்டி அல்லுடு
விஷாலின் துப்பறிவாளன் மூலம் தமிழுக்கு வந்த அனு இம்மானுவேல், அடுத்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். தெலுங்கில், கீத கோவிந்தம், நா பேரு சூர்யா, சைலஜா ரெட்டி அல்லுடு ஆகிய படங்களில் நடித்த அவர், இப்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

மகா சமுத்திரம்
குடும்ப பாங்கான வேடங்களில் வரும் அனு, அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் மகா சமுத்திரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் சர்வானந்த், சித்தார்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

7 வருடத்துக்கு பிறகு
இந்தப் படம் மூலம் 7 வருடத்துக்கு பிறகு சித்தார்த் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி நடிப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. முதலில் இந்தப் படத்தில், இந்த கேரக்டரில் சமந்தா நடிப்பதாக இருந்தது. அவர் திடீரென விலகியதால் அதிதி ராவ் நடிக்கிறார்.

இன்னொரு நாயகி
இப்போது இன்னொரு நாயகியாக, அனு இம்மானுவேல் இணைந்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் உடன் காதலுக்கும் முக்கியத்துவம் கொண்ட படமாக இது உருவாகிறது. தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 எனும் படத்தை இயக்கிய அஜய் பூபதி இப்படத்தை இயக்குகிறார். நவம்பர் மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











