வியர்க்க ..விறுவிறுக்க.. அனுஹாசனின் வெறித்தனமான ஒர்க் அவுட் பிக்ஸ் !

சென்னை : நடிகை அனு ஹாசன் வெறித்தனமான ஒர்க்கவுட் செய்யும் போட்டோக்களை இணையத்தி பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சிகளின் மூலமும் திரைப்படங்களின் மூலம் நம் அனைவருக்கும் எளிதில் பரிச்சயம் ஆனவர் அனுஹாசன்.

உலகநாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய உறவினரான அனுஹாசன் கதாநாயகியாக பல படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், மற்றும் பல பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

தமிழ் திரைத்துறை

தமிழ் திரைத்துறை

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகையாக நம் அனைவருக்கும் பரிச்சயமான அனுஹாசன். நடிகை சுஹாசினி மணிரத்னம் இயக்கிய இந்திரா படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

ஆளவந்தான், ரன்

ஆளவந்தான், ரன்

அதைத்தொடர்ந்து ஆளவந்தான், ரன், போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வந்தார். இவ்வாறு திரைப்படங்கள் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்த அனுஹாசன் தொலைக்காட்சித் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன்னை பன்முக கலைஞராக மக்கள் மத்தியில் தொடர்ந்து அறிமுகபடுத்திக் கொண்டு வருகிறார்.

காபி வித் அனு

காபி வித் அனு

இந்திரா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான அனுஹாசன் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான காபி வித் அனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபல திரைப்பட நடிகர் நடிகைகளை விருந்தினர்களாக கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருந்த காபி வித் அனு சில ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பாளர் திவ்யதர்ஷினியால் தொகுத்து வழங்கப்பட்டு காபி வித் டிடி என மாற்றப்பட்டது..

பூம் பூம் ஷக்கலக்க

பூம் பூம் ஷக்கலக்க

தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர்களான அன்புள்ள சினேகிதியே மற்றும் பூம் பூம் ஷக்கலக்க போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம், இல்லத்தரசிகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரை பிரபலமாக வலம் வந்தார்.

வெறித்தனமாக ஒர்க் அவுட்

வெறித்தனமாக ஒர்க் அவுட்

இவ்வாறு திரைப்படத்துறையிலும் தொலைக்காட்சி துறையிலும் வெற்றிகரமாக வலம் வந்த அனுஹாசன் தற்பொழுது உள்ள லாக்டவுன் நேரத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வதுடன் கலகலப்பாக அதில் பேசியும் அந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார்.

Recommended Video

RX100 Payal Rajput #PillowChallenge | Prachi | Lock down Diaries
வியர்க்க விறுவிறுக்க

வியர்க்க விறுவிறுக்க

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஒரு ஒர்க் அவுட் புகைப்படத்தில் முகம் முழுவதும் வியர்த்து உடற்பயிற்சி செய்து களைத்துப் போய் உள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் " அவர்கள் இது இல்லை என்றால் அதை செய்ய சொல்வார்கள் நாம் ஏன் இரண்டையும் செய்யக்கூடாது?? ஆனால் வாழ்க்கை சில நேரங்களில் நமக்கு சொல்லிக் கொடுத்ததை முகத்தில் இருந்து விழும் வியர்வைத் துளிகளின் மகிமையாக வெளிப்படுத்தி உள்ளேன் என இந்த பதிவின் மூலம் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X