பேண்ட்டை தூக்கி எறிந்துவிட்டு புகைப்படத்தை பகிர்ந்த அனு இமானுவேல்!

சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் மகா சமுத்திரம் திரைப்படத்தில் நடிகை அனு இமானுவேல் தற்போது நடித்து வருகிறார்.

நம்ம வீட்டு பிள்ளை கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவருக்கு உருவானது.

இதுவரை குடும்ப குத்துவிளக்காக இருந்தவர் சமீபகாலமாக கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வர இப்போது பேண்ட் இல்லாமல் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

ஏகபோகமாக வரவேற்பு

ஏகபோகமாக வரவேற்பு

மலையாளத்தில் வெளியான ஸ்வப்பன சஞ்சேரி சேரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நிவின் பாலி நடிப்பில் வேற லெவல் ஹிட்டடித்த ஆக்சன் ஹெரோ பிஜு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகத்தை கொடுத்த இவருக்கு இன்றுவரை தெலுங்கு ரசிகர்களிடையே ஏகபோகமாக வரவேற்பு இருந்து வருகிறது.

சில காட்சிகளில் மட்டுமே

சில காட்சிகளில் மட்டுமே

தமிழில் மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயரைக் கொடுக்கவில்லை. குறிப்பிடக்கூடிய அளவிற்கு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றதால் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.

மீண்டும் தெலுங்கிற்கு

மீண்டும் தெலுங்கிற்கு

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததோடு கும்மர டப்பர கும்மர டப்பர என ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து விட்டு தமிழில் தொடர்ந்து நடிப்பார் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு அம்மணி மீண்டும் தெலுங்கிற்கு பறந்துவிட்டார். பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் மகா சமுத்திரம், அல்லுடு ஆதுர்ஸ் ஆகிய படங்களில் இவர் நடித்து வர பிரபல இளம் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஓரக்கண்ணால் சூடுடேத்தும்

ஓரக்கண்ணால் சூடுடேத்தும்

இந்த நிலையில் இதுவரை குடும்ப குத்து விளக்காக திரையில் அனைவரையும் ரசிக்க வைத்த அனு இப்பொழுது கண்களுக்கு குளிர்ச்சியாக எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த வகையில் இப்பொழுது வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் அணியாமல் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு தலையில் கையை வைத்தவாறு ஓரக்கண்ணால் பற்றவைக்கும் லுக்கில் சூடுடேத்தும் இந்த ஹாட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வஞ்சனையில்லாமல் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X