லாக்டவுன் முடிந்ததும் பரபர ஷூட்டிங்.. மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஜோடி இவர்தானாம்..!

By

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிப்பது யாரென முடிவாகியுள்ளது.

Recommended Video

LOCKDOWN MOVIES : வீட்டில் இருந்து பார்க்க வேண்டிய முக்கியமான படங்கள் | FILMIBEAT TAMIL

அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க, ஆர்யா நடித்த மீகாமன், அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த தடம் ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி.

இந்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயத்துக்காகப் பேசப்பட்டன. கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ஹிட்டான, 'தடம்' புத்திசாலித்தனமான திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்டது.

விஜய் நடிக்கும் படம்

விஜய் நடிக்கும் படம்

இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதையடுத்து மகிழ்திருமேனி, விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று பரபரப்பாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படம் இப்போது தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படம் சமூகத்துக்குத் தேவையான கதையை கொண்ட படம் என்றும் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டது என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

லாக்டவுன்

லாக்டவுன்

இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி இருக்க வேண்டும். லாக்டவுன் காரணமாகத் தள்ளிப் போனது. இப்போது ஊரடங்கு முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். உதயநிதி என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை . அவர் ஜோடியாக நடிக்க சில ஹீரோயின்களிடம் பேசி வந்தனர்.

உதயநிதி ஜோடி

உதயநிதி ஜோடி

இப்போது அனு இம்மானுவேல் நடிக்க இருக்கிறார். இவர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அனு இம்மானுவேல், அடுத்து உதயநிதி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இதற்கிடையே, இயக்குனர் மகிழ்திருமேனி, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். சக்தி சரவணன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் டெடி படத்திலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்புக்கு இவர் டப்பிங் பேசியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X