கட்டிப்பிடித்து கண்ட இடத்தில் கை வைத்தார்: இசையமைப்பாளர் மீது பாடகி புகார்

By Siva

Recommended Video

இன்று ME Too- வில் சிக்கிய அனு மாலிக், முஸ்தாக் ஷேக், ராகுல் ராஜ் சிங்- வீடியோ

மும்பை: பாடகி ஒருவரிடம் இசையமைப்பாளர் அனு மாலிக் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் மீது பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதில் சோகம் என்னவென்றால் அவர் பெண்கள் விஷயத்தில் மோசம் என்பது தெரிந்தும் பலர் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் பாடகி ஒருவர் அனு மாலிக் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது,

அனு மாலிக்

அனு மாலிக்

நான் பாடகியான புதிதில் அனு மாலிக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டாவது சந்திப்பில் எனக்கு காதலன் இருக்கிறாரா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றதும் அப்படி என்றால் நீ தனிமையில் இருப்பாயே என்றார். அடுத்த முறை வரும்போது ஷிஃபான் சேலை அணிந்து வா என்றார். நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.

தொல்லை

தொல்லை

நான் கிளம்புவதற்காக எழுந்தபோது அவர் என்னை கட்டிப்பிடித்தார். அப்போது அவர் என் உடல் முழுவதையும் தனது கைகளால் தடவினார். ரெக்கார்டிங் ஸ்டுடியோ என்பதால் நான் அலறினாலும் யாருக்கும் வெளியே கேட்காது. அதனால் அவரை தள்ளிவிட்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரோ, நான் ஒன்னும் செய்யவில்லையே. என் மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளவன் நான் என்றார்.

நிம்மதி

நிம்மதி

ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது. இந்த சம்பவம் குறித்து என் தோழி ஒருவரிடம் கூறினேன். அந்த தோழி பிரபலமான பாடகரின் மகள். நான் கூறியதை கேட்ட அவர் அதிர்ச்சி அடையாமல் அனு மாமா மறுபடியும் ஆரம்பித்துவிட்டார் என்றார்.

மும்பை

மும்பை

அனு மாலிக் செய்த காரியத்தை என்னால் எப்படி நிரூபிக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டுடியோவில் சிசிடிவி கேமரா இல்லை. மும்பையில் தனியாக இருந்த நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றார் அந்த பாடகி. அனு மாலிக் மீது ஏற்கனவே 3 பாடகிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X