அஜித்துக்கு நான் சொன்ன ஆருடம் பலித்தது.. அனுமோகன் சொன்ன விஷயம்.. இப்படியொரு வாக்கு கொடுத்தாரா?
சென்னை: படையப்பா படத்தில் ரஜினிகாந்தை பார்த்து "அது எப்படி படையப்பரே பாம்பு புத்துக்குள்ள கையை விட்டு அவ்ளோ பெரிய பாம்பை புடிச்சீங்க" என கேட்டும், மின்சாரக் கண்ணா படத்தில் "இவரு யாரு புறாவுக்கே பெல் அடிச்சவரே" என விஜய்யை பார்த்து வசனம் பேசியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுமோகன்.
இயக்குநராகவும் நடிகராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ள அனுமோகன் ஜோசியராகவும் அந்த காலத்தில் இருந்தே பலருக்கும் ஆருடம் பார்த்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் நடிகர் அஜித் என்னிடம் கை நீட்டி ஜோசியம் பார்க்க சொன்னாரு, நான் சொன்னதை அவர் நம்பவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவர் என்னை பார்த்தபோது அவர் கொடுத்த வாக்குறுதியை இன்னமும் என்னால் மறக்க முடியாது என பேசியுள்ளார்.
எம்ஜிஆர் போல: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் சக்தியை எப்படி பிடித்து முதலமைச்சர் ஆனாரோ அதே போல மக்களுக்காக உழைத்து மக்களின் அன்பை பெற்றால், நடிகர் விஜய்யும் நினைத்ததை சாதிப்பார் என சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகரும் இயக்குநருமான அனுமோகன் அஜித் குமாருக்கு ஜோசியம் பார்த்த அனுபவத்தையும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
அஜித்துக்கு ஆருடம்: பவித்ரா எனும் படத்தில் அப்போதான் அஜித் சினிமாவில் அறிமுகமாகிறார். அப்போ சுபாஷ் சார் ஆபிஸில் தான் இருப்பேன். அவரும் அங்கே வருவார். அவருடைய நண்பர் ஒருவர் அஜித்துக்கும் ஜோசியம் பார்க்க சொன்னாரு, அஜித் டேட் ஆஃப் பர்த் எல்லாம் சொல்லி கையை காட்டினாரு, அப்போ நான் அவருக்கு இன்னும் சில வருடங்களில் 10 புரொட்யூசர் உன் வீட்டு லைன்ல நிப்பான். நானும் ஒருத்தனா நிப்பேன் எனக்கும் கால்ஷீட் கொடுக்கணும் என்றார்.
நம்பாத அஜித்: அட போங்க சார் என அப்போது நான் சொன்ன ஆருடத்தை அஜித் நம்பவில்லை. அதன் பின்னர், சில ஆண்டுகளில் காதல் கோட்டை படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அஜித் எங்கேயோ போய் விட்டார். ஒருநாள் ஒரு விழாவில் என்னை சந்தித்தார். என்னுடைய கையை பிடித்துக் கொண்டு சார் நீங்க சொன்னது அப்படியே பலித்து விட்டது. இன்னைக்கு நான் ஒரு நல்ல நிலைமையில இருக்கேன். கதையை கூட கேட்கல, எப்போ டேட் வேணும்னு சொல்லுங்க படம் பண்ணலாம் என வாக்குக் கொடுத்தார். ஆனால், என்னால் தான் அஜித்தை வைத்து படம் பண்ண முடியாமல் போய் விட்டது என ரொம்பவே ஃபீல் பண்ணி பேசிய அனுமோகன் அஜித்தின் அந்த பண்பை பாராட்டிப் பேசினார்.


Click it and Unblock the Notifications











