விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல இளம் நடிகை... அவர் யார் தெரியுமா!
சென்னை : நடிகர் விஜய்சேதுபதி இப்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தவரும் இவர் மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஹீரோயிசம் இல்லாத
எப்போதுமே ஹீரோயிசம் இல்லாத வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான மாஸ்டர் உப்பனா படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீசை வசூலால் ஆட்டிப்படைத்தது. குறிப்பாக மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவரை பாராட்டாத ஆட்களே கிடையாது என சொல்லலாம். அதேபோல தெலுங்கில் நடித்த உப்பனா திரைப்படமும் கிட்டத்தட்ட பத்தே நாட்களில் 100 கோடியை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து
இவ்வாறு விஜய் சேதுபதி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என்று வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளும் இவருக்கு வாய்ப்புகள் பல குவிந்து வர இதுவரை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் முதல்முறையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் சேதுபதி
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்,சீமராஜா என சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து பயணித்த இயக்குனர் பொன்ராம் தற்போது சசிகுமார் நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது. அதற்குள் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார்.

ஜோடியாக இளம் நடிகை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் பொன்ராம் இயக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதிக்கு 46வது திரைப்படமாக உருவாகிறது . இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்ந்தியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எந்த முன்னணி நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல இளம் நடிகை அனுகீர்த்தி வாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோயினாக அறிமுகமாகிறார்
மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர். பிக் பாஸ் முகின்ராவ் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் அனுகீர்த்தி வாஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











