நைட்டியுடன் வயலில் இறங்கி விதை விதைத்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. வாழ்த்தும் ரசிகர்கள்!
கொச்சி: பிரபல நடிகை வயலில் இறங்கி விதைவிதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 மாதமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. சினிமா துறை மொத்தமாக முடங்கி கிடக்கிறது.

விவசாய வேலை
இதனால், நடிகர், நடிகைகள் தங்கள் குடும்பத்துடன் நாட்களை செலவழித்து வருகின்றனர். சிலர் வேறு சில விஷயங்களை கற்று வருகின்றனர். சில நடிகைகள், சோசியல் மீடியாவில் நேரத்தை செலழித்து வருகின்றனர். பலர் தங்கள் வீட்டு வேலைகளை செய்துவருகின்றனர். அதன்படி நடிகை ஒருவர் தங்கள் வயலில் இறங்கி விவசாய வேலை பார்த்துள்ளார்.

முன்னணி நடிகை
அவர் அனுமோல். தமிழில், கண்ணுக்குள்ளே, சூரன், திலகர், ஒருநாள் இரவில் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், அங்கு இவன் மேகரூபன், ராக்ஸ்டார், பட்டாபிராமன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அனு யாத்ரா
கதகளி மற்றும் பரத நாட்டிய கலைஞரான இவர் அனு யாத்ரா என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இவருடைய சொந்த ஊர் பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம். இவரது குடும்பத்திற்கு அங்கு விவசாய நிலம் இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அங்கு சென்று விவசாய பணிகளைச் செய்வது வழக்கம்.
விதை விதைப்பது
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அவர் வயலில் விதை விதைப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் பரவி வருகிறது. பல நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











