வழுக்கை விழுந்ததால் ரூ. 7 லட்சத்திற்கு முடி நடவு செய்த பிக் பாஸ் பிரபலம்

By Siva

மும்பை: பிக் பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுப் ஜலோடா முடி நடவு செய்ய பெரிய தொகையை செலவு செய்துள்ளார்.

சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் 12 வீட்டில் 28 வயது ஜஸ்லீன் மற்றும் அவரின் குருவான 65 வயது பாடகர் அனுப் ஜலோடா ஜோடியாக இருந்தது பலரையும் வியக்க வைத்தது.

காரணம் அவர்கள் காதல் ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றது தான்.

அனுப்

அனுப்

பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப் ஜலோடா வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் தனக்கு முடி நடவு செய்தது பற்றி கூறினார். தலையில் சொட்டை விழுந்ததால் ரூ. 7 லட்சம் செலவு செய்து முடியை நட்டு வைத்தாக அவர் கூறினார். குறைந்த செலவில் இதை செய்ய முடியும் என்றாலும் தான் காஸ்ட்லி சிகிச்சையை தேர்வு செய்ததாக கூறினார்.

முடி

முடி

அனுப் தனது தலையில் 7 ஆயிரம் முடியை செயற்கையாக நட்டு வைத்துள்ளார். ஒரு முடியின் விலை ரூ. 100 என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்ட பார்வையாளர்களோ அடேங்கப்பா முடி நடவுக்கு இவ்வளவு செலவு ஆகுமா என்று வியந்துள்ளனர். எப்படி முடியை தலையில் நடுவார்கள் என்பதை சக போட்டியாளர்கள் அவரிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

பரவாயில்லை

பரவாயில்லை

ஜஸ்லீன் என்னை பயன்படுத்திக் கொண்டார். நான் பிரபலமாக இருப்பதால் அதை பயன்படுத்தி அவர் விளம்பரம் தேடியுள்ளார். இது பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகே எனக்கு புரிந்தது. அவரின் செயலால் எனக்கு வருத்தம் இல்லை. ஜஸ்லீனின் தந்தையை தொடர்பு கொண்டு அவரின் செயல் பற்றி கூறினேன். வெளியே வரட்டும் பாடம் கற்பிக்கிறேன் என்றார் அவர் என அனுப் தெரிவித்தார்.

காதல்

காதல்

ஜஸ்லீன் சக பிக் பாஸ் போட்டியாளரான சிவாசிஷ் மிஸ்ராவை காதலித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். சிவாசிஷ் நல்லவர். பெரிய பிசினஸ் குடும்பத்தில் இருந்து வந்துள்ளவர். அவர் நல்ல மனம் உள்ளவர். அவரும், ஜஸ்லீனும் காதலித்தால் அவர்களுக்கு என் ஆசிகள் உண்டு. குரு-சிஷ்யையாக பிக் பாஸ் வீட்டிற்கு செல்லலாம் என்றார் ஜஸ்லீன். ஆனால் பிக் பாஸ் வீட்டில் எங்களை காதல் ஜோடியாக அறிமுகம் செய்து வைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார் அனுப்.

தூக்கம்

தூக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என் எடை குறைந்துள்ளது. அதில் எனக்கு மகிழ்ச்சியே. கடந்த 30 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லாமல் இருந்தேன். பிக் பாஸ் வீட்டில் தினமும் 8 மணிநேரம் தூங்கினேன். வேலையில் ரொம்ப பிசியாக இருந்த எனக்கு பிக் பாஸ் வீட்டில் ரிலாக்ஸாக இருக்க முடிந்தது என்கிறார் அனுப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X