twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூரியின் கருத்து வெட்கக்கேடானது.. தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை பேச்சு.. அனுபம் கேர் ஆவேசம்!

    |

    மும்பை : தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து ஜூரி நாடவ் லேபிட்டின் கருத்து வெட்கக்கேடானது என அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

    53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ந் தேதி முதல் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் சாராத படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

    Bigg Boss Tamil 6: டேஞ்சர் ஜோனில் இந்த வாரம் யார் இருக்காங்க.. திமிரா பேசுனவங்க வெளியேற போறாங்களா? Bigg Boss Tamil 6: டேஞ்சர் ஜோனில் இந்த வாரம் யார் இருக்காங்க.. திமிரா பேசுனவங்க வெளியேற போறாங்களா?

    மோசமான படம்

    மோசமான படம்

    சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பேசிய ஜூரி மற்றும் விழா தலைவருமான நடவ் லாபிட், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சார பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறிய கருத்து தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

    வெட்கக்கேடானது

    வெட்கக்கேடானது

    இந்நிலையில், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றம் உண்மையான நிகழ்வாக இருந்தால், நான் வணங்கும் கடவுள் நாடவ் லேபிட்னுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும், இந்த அறிக்கை திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது போல எனக்கு தெரிகிறது. இதில் நாடவ் லேபிட் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார் என்பதை நினைக்கும் போது வெட்கக்கேடாக உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் படுகொலையின் துயரங்களை அவர் வேதனைப்படுத்தியுள்ளார். அவர் சுய திருப்திக்காக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று அனுபம் கேர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பொய் உயரமானது...

    பொய் உயரமானது...

    முன்னதாக அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொய் எவ்வளவு உயரமாக இருந்தாலும் சரி.. உண்மையுடன் ஒப்பிடுகையில் அது எப்போதும் சிறியது." என்று பதிவிட்டு, தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படங்களின் படங்களை அதில் இணைத்துள்ளார்.

    துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்

    துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்

    அதே போல இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடுவரின் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார். அதில், IFFI கோவாவில் நடுவர்கள் குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actress Anupam Kher says, Shameful for him to make a statement like this
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X