twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்களோட உயிரை காப்பாத்துங்க.. மத்ததை அப்புறம் பாருங்க.. மத்திய அரசை வெளுத்து வாங்கிய அனுபம் கெர்!

    |

    மும்பை: கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தடுமாறி வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் சாடியுள்ளார்.

    பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான அனுபம் கெர் இப்படியொரு விமர்சனத்தை முன் வைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    பிரமாண்ட இயக்குநரின் படத்தில் இணையும் கிச்சா சுதீப்? தீயாய் பரவும் தகவல்! பிரமாண்ட இயக்குநரின் படத்தில் இணையும் கிச்சா சுதீப்? தீயாய் பரவும் தகவல்!

    ட்விட்டரில் #AnupamKher என்ற ஹாஷ்டேக்கை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.

    நாள்தோறும் நாலு லட்சம்

    நாள்தோறும் நாலு லட்சம்

    உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு கிட்டத்தட்ட நாள்தோறும் இந்தியாவில் 4 லட்சம் மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    தடுமாற்றம்

    தடுமாற்றம்

    மோடி அரசு கொரொனா பரவலை தடுக்க தவறியதாக எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகர் அனுபம் கெர், கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தடுமாற்றத்தை சந்தித்துள்ளதாக விளாசித் தள்ளி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    மோடி ஆதரவாளர்

    மோடி ஆதரவாளர்

    பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படத்தில் மன்மோகன் சிங்காக சமீபத்தில் நடித்து மிரட்டிய அனுபம் கெர் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரே இப்படியொரு சாட்டையை மோடி அரசுக்கு எதிராக வீசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிம்பம் முக்கியமல்ல

    பிம்பம் முக்கியமல்ல

    இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். அரசு அதைத்தான் முழு மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும். தேவையற்ற பிம்பத்தை பாதுகாக்கும் முயற்சியிலும், மற்ற நடவடிக்கைகளும் ஈடுபடக் கூடாது என்றும் நடிகர் அனுபம் கெர் நேரடியாகவே கண்டித்துள்ளார்.

    நதிகளில் பிணங்கள்

    நதிகளில் பிணங்கள்

    கங்கை முதல் நாட்டில் உள்ள அத்தனை புண்ணிய நதிகளிலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதப்பது மிகப்பெரிய அபாய எச்சரிக்கை என்றும் உடனடியாக போர் கால அடிப்படையில் செயல்பட்டு இந்த கொரோனா எனும் கொடிய நோய்க்கு மத்திய அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களை காப்பாற்றியே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    கோபப்படுவார்கள் தான்

    கோபப்படுவார்கள் தான்

    ஓட்டுப் போட்டு நாட்டை ஆள தேர்ந்தெடுத்தவர்கள், மக்கள் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால், பொதுமக்கள் கோபப்பட்டு திட்டவும் சபிக்கவும் செய்வார்கள் தான். அவர்களை தண்டிக்கும் மனநிலையை விட்டு விட்டு அடுத்து ஒரு உயிரும் போகாமல் இருக்க என்ன வழி செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல் ஆற்றுங்கள் என்றும் விளாசித் தள்ளி உள்ளார் அனுபம் கெர்.

    English summary
    Veteran actor Anupam Kher slams BJP government over COVID-19 management. He was a staunch supporter of Prime Minister Modi and the BJP Government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X