கோலிவுட்டை விட்டு ’தள்ளிப் போகாதே’.. அனுபமா ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கிடைச்சுடுச்சு!

சென்னை: ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் 'தள்ளிப் போகாதே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன நடிகை அனுபமா பரமேஸ்வரனின் 24வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

காலை முதலே ஹாஷ்டேக்குகளை உருவாக்கி தென்னிந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்த்டே ட்ரீட்

பிரேமம், ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ், கொடி, தேஜ் ஐ லவ், ராக்‌ஷசசுடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரனின் 24வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தனுஷின் கொடி படத்தைத் தொடர்து, அதர்வா நடிப்பில் அனுபமா நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

என்ன ஒரு டைட்டில்

என்ன ஒரு டைட்டில்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் "தள்ளிப் போகாதே" பாடல் வரிகளை ஆர். கண்ணன் இயக்கத்தில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்திற்கு வைத்துள்ளனர். இருவரும், இருக்கும் ரொமான்டிக் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

Anupama Parameshwaram in love with Hindi Actor

நேசமிகு பயணம்

"தள்ளிப் போகாதே, இந்தப்படத்திற்கு வசனம் எழுதியது ஒரு நேசமிகு பயணம். பாடல்களை எழுதும்போது கவிதைகள் எழுதிய நிறைவு. இயக்குநர் கண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.'விளம்பர இடைவெளிக்குப்'பின் மீண்டும் நண்பர் அதர்வாவுடன் இணைவதில் மகிழ்ச்சி." என தள்ளிப் போகாதே வசனகர்த்தா கபிலன் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

ஆர். கண்ணன்

ஆர். கண்ணன்

ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர். கண்ணன், பாலிவுட்டில் வெற்றி பெற்ற ஜாப் வி மெட் படத்தை கடந்த 2009ம் ஆண்டு கண்டேன் காதலை என ரீமேக் செய்து பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

அதர்வாவுடன்

அதர்வாவுடன்

பூமராங் படத்தைத் தொடர்ந்து மறுபடியும் நடிகர் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப் போகாதே படத்தை இயக்கி வருகிறார் ஆர். கண்ணன். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வேலை இல்லா பட்டதாரி, வானம் கொட்டட்டும் படங்களில் நடித்துள்ள அமுல் பேபி அமிதாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X