ஓவரா டோனட் சாப்பிட்டு குண்டான நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. வைரலாகும் ரீல் வீடியோ!
சென்னை : மலையாள சினிமாக்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்திற்கு பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமல் இருந்த இவர் இப்பொழுது அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.
தள்ளிப்போகாதே மிக விரைவிலேயே ரிலீஸாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது ஓவரா டோனட் சாப்பிட்டு குண்டாக மாறியுள்ள ஃபன்னி ரீல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அட்டகாசமான ஃபர்ஸ்ட்
ரங்கஸ்தலம் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய இயக்குனர் பல்நாடி சூர்ய பிரதாப் இயக்கத்தில் 18 பேஜஸ் என்ற தெலுங்கு படத்தில் நடிகை அனுபமா நடித்து வருகிறார் இதில் ஹீரோவாக நிகில் சித்தார்த் நடித்து வர அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது.

அதர்வா ஜோடியாக
தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே திரைப் படங்களில் நடித்திருந்தாலும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள அனுபமா கொடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய கேப் விட்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி அதர்வா நடித்து வரும் தள்ளிப்போகாதே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது
Recommended Video

முக்கிய வேடத்தில்
காதல் கலந்த த்ரில்லர் கதை களத்தைக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் வேலையில்லா பட்டதாரி அமுல்பேபி என்று அழைக்கப்படும் அமிதாஷ் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கி தயாரித்துள்ளார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமாவின் தமிழ் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

குண்டு அனுபமா
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வரும் நிலையில் இப்பொழுது செம க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரில்ஸில் டோனட் ஓவரா சாப்பிட்டு குண்டாகியது போல அனுபமா வெளியிட்டுள்ள ஃபன்னி வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











