தடுப்பூசி போட்டுக் கொண்டார் அனுபமா பரமேஸ்வரன்.. 2வது போட்டோல என்ன சொல்ல வறீங்க!

கொச்சி : கொடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான அனுபமா நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடிக்கிறார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து பிரபலமாக உள்ளவர்.

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் நிலையில் இப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டரை கொடுத்த

பிளாக்பஸ்டரை கொடுத்த

சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற பிளாக்பஸ்டரை கொடுத்த துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கொடி படத்தில் நடித்து நேரடி தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.

Recommended Video

Anupama Parameshwaran புகைப்படம் கொண்ட Mark List | Biharல் பரபரப்பு
தள்ளிப்போகாதே

தள்ளிப்போகாதே

மலையாளம் மற்றும் தெலுங்கில் இவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார். நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கி தயாரித்தும் உள்ளார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நின்னுக்கோரி தமிழ் ரீமேக்தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

கடைசியாக வெளியான மணியரயிலே அசோகன் படத்திற்கு பிறகு ஃப்ரீடம் அட் மிட்நைட் என்ற குறும்படத்தில் அனுபமா நடித்திருந்தார். வித்தியாசமான கதை களத்தை கொண்டு தெலுங்கில் உருவாகி வரும் 18 பேஜஸ் என்ற படத்தில் இவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . லாக்டவுன் முடிந்த உடனேயே 18 பேஜஸ் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இரண்டாவது போட்டோல

இரண்டாவது போட்டோல

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் மட்டுமல்லாமல் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இப்பொழுது முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதோடு இரண்டாவது புகைப்படம் சொல்ல வருவது என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம் என சுவாரசியமான கேள்வி ஒன்றையும் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X